பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது 41

தந்தையிடம் சேர்த்துவிடலாம் என்றும் நினைத்து நான் நிரம்பவும் ஆவலும், ஆத்திரமும் கொண்டு ஓடிவந்தேன், அதுதான் நிறைவேற வழியில்லாமல் போய்விட்டது. நான் எவ்வளவுக் கெவ்வளவு அவசரப்பட்டேனோ அவ்வளவுக்கவ்வளவு முட்டுக் கட்டை விழுந்துவிட்டது. அதற்கு இன்னம் காலம் வரவில்லை போலிருக்கிறது. என் தந்தையை அவருடைய பழைய நிலைமைக்குக் கொண்டுவந்து வைத்து அவருடைய மனக் குறைகளை எல்லாம் நீக்கி, அவர் சந்தோஷமாக இருக்கும்படி செய்ய நான் அவசரப்படுகிறேன். ‘பதறாதே, மெதுவாய்ப் போ என்று கடவுள் இதனால் காட்டுகிறார் போலிருக்கிறது. “சரி; நடப்பது நடக்கட்டும். என் கோரிக்கை பூர்த்தியடையுமோ அடையாதா என்பதை நாளைய தினம் ஏற்படப் போகும் நியாயாதிபதியின் தீர்ப்பு நிச்சயிக்கட்டும்’ என்று திவான் சாமியார் பலவாறு எண்ணமிட்டு நிலை கலங்கிக் களைத்துத் தளர்வடைந்து சுவரில் சாய்ந்திருக்க, முதல் நாளிரவு முழுதும் துங்காமலேயே இருந்தவர் ஆதலால், அவர் சிறிது நேரத்தில் தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்.

பிற்பகல் இரண்டு மணி சுமாருக்கு காவற்காரன் அவரை எழுப்பி, ஆகாரம் ஏதாவது தேவையா என்று வினவினான். திவான் சாமியாரது மனம் தமது தந்தையைப் பற்றி பெரிதும் ஏக்கமும் கவலையும் கொண்டு சகிக்க வொண்ணாத வேதனையில் ஆழ்ந் திருந்தது. ஆகையால் அவருக்கு போஜனம் வேண்டுமென்ற வேட்கையே தோன்றவில்லை. ஆகவே அவர் தமக்குப் பசியில்லையென்றும் ஆகாரம் தேவையில்லையென்றும் கூறி விட்டார். அன்றைய தினம் இரவிலும் காவற்காரன் வந்து பகலில் கேட்டது போலவே ஒரு குரல் கேட்டுத் தனது பழியைக் கழித்துக்கொண்டு போய்ச் சேர்ந்து விட்டான். திவான் சாமியாருக்குத் தமது அபாரமான வியாகுலத்தில் அன்னத்திலாவது தண்ணீரிலாவது புத்தி செல்லவே இல்லை. தாம் சந்தேகாஸ் பதமான நிலைமையில் அகப்பட்டுக் கொண்டிருந்தமையால் மறுநாள் தம்மை நியாயாதிபதி எப்படியும் ஆறுமாதம் அல்லது ஒரு வருஷகாலத்திற்கு கண்டித்து விடுவார் என்ற ஒரு நிச்சயம் அவரது மனத்தில் எழுந்து அவரை வதைக்கத் தொடங்கியது. தாம்