பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது 71

அதைப்பற்றி நான் தனியாக விசாரணை செய்கிறேன். அதிருக் கட்டும். அதோ நிற்கிற சாமியாரைப் பார் அவருடைய சட்டைப் பையில் தானே சங்கிலித்துண்டை நீ போட்டாய்?” என்றார்.

குறவன், “ஆமா எஜமானே!” என்றான்; நீதிபதி, “இந்தச் சாமியார் இதற்கு முன் உனக்குப் பழக்க மானவரா?” என்றார்.

குறவன், “இல்லை சாமி! அந்தக் கும்பலிலே இவரை நேற்று தான் பார்த்தேன்’ என்றான்.

உடனே நீதிபதி பிராசிகூடிங் இன்ஸ்பெக்டரை நோக்கி, “என்ன ஐயா! சாமியாரை இனி விட்டுவிடலாமல்லவா? அதற்கு ஏதாவது ஆட்சேபணை உண்டா? என்றார்.

பிராசிகூடிங் இன்ஸ்பெக்டர், ‘தடையில்லாமல் உடனே விட்டுவிடலாம். எங்களுக்கு அவர்மேல் ஏதாவது பகையுண்டா? ஒன்றுமில்லை. வேறு தக்க புலன் இல்லாதிருந்தது. ஆகையால் சட்டப்படி நாங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தோம். சாமியார் நிரபராதி என்பதைத் தெரிந்து கொண்டும் நாங்கள் வேண்டுமென்றே இவரை இங்கே இழுக்கவில்லை. ஆனால், இவர் இதற்கு முன் தக்க பெரிய மனிதராயிருந்த வராகத் தெரிய வருகிறது. ஆகவே, போலீசார் சார்பாக, நான் சாமியாருக்கு எங்களுடைய மனமார்ந்த வருத்தத்தையும் அநுதாபத்தையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இவருடைய நோட்டுகளைக் கொடுத்து அனுப்பி விடலாம்’ என்றார்.

உடனே நீதிபதி, ‘ஐயா பரதேசியாரே! இப்படி வாருங்கள். இதோ உங்களுடைய நோட்டுகளெல்லாம் இருக்கின்றன. எண்ணி எடுத்துக் கொள்ளுங்கள். உங்களை நான் விடுதலை செய்திருக்கிறேன். நீங்கள் சுயேச்சையாய்ப் போகலாம். நமஸ்காரம்” என்று கூறி, நோட்டுகளையும் எடுத்துக் கொடுத்து வணக்கமாக ஒரு கும்பிடும் போட்டார். அந்த நீதிபதியின் ஒழுங்கையும் நற்குணத்தையும் கண்ட திவான் சாமியார் தமது இரு கரங்களையும் நிரம்பவும் பணிவாகக் குவித்து, ‘ஐயா! நீதிபதியவர்களே! இந்த ஏழைப் பரதேசிக்குத் தாங்கள் இவ்வளவு மரியாதை கொடுப்பதைக் காண என் உள்ளம் பூரிக்கிறது.