பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது 73

சாசனத்தை ஏற்று எங்களை உய்வித்தருள வேண்டும்’ என்று நிரம்பவும் வணக்கமாகக் கூறிப் பிரார்த்தித்துக் கொண்டார்.

உடனே திவான் சாமியார், “முதலியார் ஐயா என்று ஏதோ மறுமொழி கூற ஆரம்பிக்க, உடனே மேலப்பண்ணை முதலியார் எஜமானே! தாங்கள் என்னை அப்படி மரியாதைப் படுத்தி அழைப்பது என்னைக் குத்திக் கொல்வதுபோல இருக்கிறது. பழைய மாதிரி தாங்கள் என்னை அடே கந்தசாமி என்று கூப்பிடும் பட்சத்தில் என் மனசில் உண்டாகும் ஆனந்தம் அளவிட முடியாததாக இருக்கும். மகாப் பிரபுவே! தங்களுக்குத் தெரியாத நியாயம் ஒன்றுமில்லை. நான் தங்களிடம் இருந்த காலத்தில், தாய், தகப்பன், குரு, தெய்வம் எல்லோரும் தாங்களாகவே பாவித்து நான் தங்களிடம் நடந்துகொண்டேன் என்பது தங்களுக்குத் தெரியாததல்ல. இன்னமும் நான் அதே நிலைமையில் தான் இருக்கிறேன். ஆனால் இப்போது என்னிடம் இரண்டு காசு சேர்ந்திருக்கிறது. அதனால், தங்களுக்கும் எனக்கும் ஆதியிலிருந்த முறைமை மாறிப் போகுமா ஒரு நாளும் மாறாது. இந்தக் காசும் தங்களுடைய பிரியத்தினாலும், நன் கொடையினாலும், ஆசீர்வாதத்தினாலும் ஏற்பட்டதேயன்றி வேறல்ல. ஆகையால் தாங்கள் இனி என்னை, “அடே கந்தசாமி” என்று கூப்பிட வேண்டும். இரண்டாவது, தாங்கள் என் குடிசைக்கு எழுந்தருள வேண்டும். மூன்றாவது, நானும் என் சம்சாரமும் தங்கள் விஷயத்தில் செய்த பெருத்த அபசாரத்திற்கு நாங்கள் ஏதேனும் பிராயச்சித்தம் செய்து கொண்டாலன்றி, எங்கள் மனம் ஒரு நாளும் அமைதியடை யாது. ஆகையால், அதற்கும் தாங்கள் தான் ஏதாவது ஒரு பரிகாரம் செய்ய வேண்டும்’ என்று நிரம்பவும் பணிவாகக் கூறி வேண்டிக் கொண்டார். - -

உடனே திவான் சாமியார், “அப்பா கந்தசாமி! உலகத்தில் ஒருவனுக்குத் திடீரென்று அபரிமிதமான செல்வம் வந்துவிடும் பகrத்தில் அவன் செருக்கும் இறுமாப்பும் அடைந்து, பழைய நிலைமையை மறந்து, தான் ஆகாயத்திலிருந்து நேரில் குதித்து அப்போதே வந்தவன்போல நடந்து கொள்வதே பெரும்பாலும் காணப்படுகிறது. உனக்கு இவ்வளவு பெரிய செல்வம்