பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 . செளந்தர கோகிலம்

களையே செய்வோருடன் நான் எப்போதும் இருந்து பழகினால், எனக்கும் அதே மனப்போக்கும் நடத்தையும் சுலபமாகவே பழகிவிடுமென்பது நிச்சயம். சுவாமிகளுக்குத் தெரியாததற்கு நான் சொல்லிக் கொடுக்கப் போகிறேனா என்று கூறிய வண்ணம் திவான் சாமியாரைத் தொடர்ந்து சென்றார். அப்பொழுது காவிரியாற்றுப் பாலம் வந்துவிட்டது. ஆகையால், அதன் வடபுரத்திலிருந்து ஊர் ஆரம்பமாகிறது. ஆகையாலும், அவர்கள் இருவரும் தங்களது சம்பாஷணையை அவ்வளவோடு நிறுத்திக் கொண்டனர். ஆயினும் ஊருக்குள் நுழையும்பொழுது திவான் சாமியார் புதிய சாமியாரை நோக்கி, “ஐயா! தாங்கள் எனக்கு ஒர் உதவி செய்ய வேண்டும். நேற்று காலையில் நடுவழியில் என்மேல் திருட்டுக் குற்றம் ஏற்பட்டது, நான் நேற்று முழுதும் சிறைச்சாலையிலிருந்தது, இன்று விசாரணை நடந்தது முதலிய வரலாறு பெரியவருக்குத் தெரிந்தால் அவர்களுடைய மனம் நிரம்பவும் புண்பட்டுப் போகும். அதுவுமன்றி, இனி நாம் தங்க ளுடைய இளைய சம்சாரத்தைத் தேடுவதற்காக எங்கும் போய் அலைய வேண்டாமென்று அவர்கள் கண்டித்துக் கூறிவிடுவார்கள். ஆகையால் இந்த வரலாற்றை அவர்களிடம் சொல்லாமல் மறைத்து வைப்பதே உசிதமென்று நான் நினைக்கிறேன். இதை நாம் சொல்லுவதனால், பெரியவருக்கு நன்மை எதுவும் உண்டாகாவிட்டாலும், கெடுதல்கள் பல உண்டாகும். ஆதலால், இதை நாம் அவர்களிடம் தெரிவிக்காமல் இருப்பதே உசித மெனப்படுகிறது. இது விஷயத்தில் நீங்களும் எனக்கு அநுசரணை யாக நடந்து கொள்ள வேண்டும். இந்த உதவியைத்தான் நான் உங்களிடம் கோருகிறேன்” என்றார்.

உடனே புதிய சாமியார் (இவரை இனி நாம் உதவிச் சாமியார் என்று குறிப்போம்) திவான் சாமியாரை நோக்கி, “ஆம், நானும் அப்படியே தான் நினைத்தேன். நாம் அப்படித் தான் செய்ய வேண்டும். தங்கள் இஷ்டம்போலவே, நான் நடந்து கொள்ளுகிறேன்” என்றார். -

சிறிது நேரத்தில் இருவரும் குஞ்சிகபாத முதலியார் இருந்த ஜாகைக்குப் போய்ச் சேர்ந்தனர். திவான் சாமியார் தாம் பாபநாசத்திற்கு அருகிலுள்ள ஊருக்குப் போய் அவ்விடத்தில்