பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 செளந்தர கோகிலம்

விடாமல், மறுநாளும் புறப்பட்டு, மிகுதியிருந்த இடங்களுக்கும் போய்க் கடைசி வரையில் தீர விசாரித்து விடுவதே நன்றென்று அவர்கள் இருவரும் தீர்மானித்துக் கொண்டு ஒரிடத்தில் படுத்து அந்த இரவைக் கழித்தனர். மறுநாள் அதிகாலையிலேயே அவர்க ளிருவரும் எழுந்து வைகை ஆற்றங்கரைக்குப் போய் ஸ்நான நியம நிஷ்டைகளை முடித்துக்கொண்டு முதல் நாள் போஜனம் செய்த இடத்தில் தமது போஜன காரியத்தைத் தீர்த்துக்கொண்டு தமது விசாரணையைத் துவக்கிக் கொண்டனர். அவர்கள் ஒவ்வோர் அரிசி மில்லாய் அன்றைய மாலைக்குள் எல்லா இடங்களுக்கும் போய் விசாரித்துப் பார்த்துவிட்டனர். முதல் நாளில் கிடைத்த தகவலே மறுநாளும் கிடைத்ததன்றி புதிய செய்தி எதுவும் கிடைக்கவில்லை. ஆகவே, தாம் அதுவரையில் அரிசி மில் ஸ்தாபித்து வர்த்தகம் செய்யப் போவதாக இராமலிங்க முதலியார் தமது சொந்த ஊரில் கூறிவிட்டு வந்தது. வேண்டு மென்றே பொய் சொல்லி அந்த ஊராரை ஏமாற்றிவிட்டுப் போகவேண்டுமென்னும் கருத்துடன் கூறியதென்று திவான் சாமியாரும் உதவிச் சாமியாரும் தமக்குள் தீர்மானித்துக் கொண்டு, தாம் அதற்குமேல் திருவையாற்றுக்குத் திரும்பி வருவதைத் தவிர வேறு காரியம் எதுவுமில்லையென்று முடிவு கட்டினர். ஆயினும் அவர்கள் அன்றைய பகல் முழுதும் அலைந்து அலுத்துப் போயிருந்தமையால், இரவை இந்த ஊரிலேயே போக்கிவிட்டு மறுநாளைய ரயில் வண்டியில் புறப்பட்டுத் தஞ்சைக்குப் போவதென்று அவர்கள் தீர்மானித்துக்கொண்டு ஒரு சத்திரத்தில் தங்கி இருந்தனர். அந்த இரவும் கழிந்தது. மறுநாள் காலையில் திவான் சாமியார் விழித்துக்கொண்டு பார்க்கிறார். தமக்குப் பக்கத்திலிருந்த உதவிச் சாமியார் காணப் படவில்லை; அவர் ஒருகால் முன்னால் எழுந்து ஆற்றங்கரைக்குப் போயிருக்கலாமென்று திவான் சாமியார் நினைத்து அரை நாழிகை காலம் பொறுத்திருந்தார். உதவிச் சாமியார் புன்னகை தவழ்ந்த முகத்தோடு அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தார். அவரைக் கண்ட திவான் சாமியார், “ஆற்றங்கரைக்குப் போய் வருகிறீர் களா? என்னையும் எழுப்பியிருந்தால், நானும் வந்திருப்பேனே. இருவரும் போய் நம்முடைய ஸ்நானம் முதலிய காரியங்களை யெல்லாம் முடித்துக்கொண்டு வந்திருக்கலாமே” என்றார்.