பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது 89

கதறியழுகிறார். குருக்கள் தேங்காய் பழம் முதலியவைகளை நிவேதனம் செய்தபின் கற்பூர ஹாரத்தியைக் கொளுத்தி உயர்த்தவே, திவான் சாமியார் சன்னதங் கொண்டவர் போல மாறிப் போனார். அவரது கை கால்களும் அங்கங்களும் வெடவெடவென்று ஆடுகின்றன. சிகை முதல் நகம் வரையில் உரோமம் சிலிர்த்துத் தாண்டவமாடுகிறது. தழுதழுத்து முற்றிலும் நைந்த குரலில் அவர் முருகக் கடவுளை ஸ்தோத்திரம் தொடங்கி அடியில் வரும் திருப்புகழைப் பாட ஆரம்பித்துவிட்டார்:

திருப்புகழ்

தனத்தந்தானன தானன தானன தனத்தந்தானன தானன தானன தனத்தந்தானன தானன தானன - தனதானா.

அணிச்சங்கார் முகம் வீசிட மாறு துவள்பஞ்சான தடாகம் விடமட வனத்தின்துவி குலாவி சீரடி - மடமானார் அருக்கன் போலொளி விசிய மாமர கதப்பையும் பூணணி வார்முலை மேன்முக மழுத்தும் பாவியென் ஆவியீடேறிட - நெறிதாராய் வினைச் சண்டாளனை விணனை நிள்நிதி தனைக் கண்டாணவ மானநிர் முடனை விடக்கண் பாய்துகர் பாழனையோர் மொழி - பகாதே விகற்பங் கூறிடு மோக விகாரனை அறத்தின் பாலொழுகாத மூதேவியை விபித்துன் பாதுகை நீதரநாருைள் - பெருவேனோ முனைச் செங்கோலிடு நீல மகோததி அடைத்தஞ்சாத விராவண நீள்பல

முடிக்கண் றோர்கணை ஏவுமிராகவன் - மருகோனே முளைக்குஞ் சீத நிலாவொடு பாய்விரி திரைக் கங்காநதி தாதகிகூவிள முடிக்குஞ் சேகரர் போருளால்வரு - முருகோனே தினைச் செங்கானக வேடுவராவனர் திகைத்தந் தோவென வேகணியாகிய