பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 செளந்தர கோகிலம்

சாமியாரைப் பார்த்து, “சரி, போகலாம் வாருங்கள். நாம் பரதேசிகள் தானே. பரதேசிகள் பணம் கொடுத்துச் சாப்பிடுவ தென்பதும் அசம்பாவிதமல்லவா என்றார்.

உடனே சாமியார் இருவரும் எழுந்து உள்ளே சென்றனர். சத்திரத்தையர் முதல் கட்டிலிருந்த கிணற்றண்டை அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டுபோய், கைகால்களைச் கத்திசெய்து கொள்வதற்குச் செம்புகளில் தண்ணிர் கொடுத்து, அவர்கள் அந்தக் காரியத்தை முடித்துக்கொண்ட பிறகு, அவர்களை அழைத்துக் கொண்டு இரண்டாவது கட்டிற்குப்போய் அவ்விடத் தில் போடப்பட்டிருந்த தலைவாழை இலைகளுக்குப் பக்கத்தில் இருந்த மணப்பலகைகளில் அவர்களை உட்கார வைத்து போஜனம் பரிமாறத் தொடங்கினார். அவரைக் காட்டிலும் பன்மடங்கு அதிக நற்குணவதியாகத் தோன்றிய அவரது சம்சாரமும், அவரும் உள்ளே இருந்து தட்டுகளிலும் கோகர்ணங் களிலும் ஏராளமான பதார்த்தங்களைக்கொணர்ந்து கொணர்ந்து தாராளமாகக் கவிழ்த்து, அவர்கள் போதும் போதுமென்று கதறும்படிச் செய்துவிட்டனர். வடை பாயசம் சித்திரான்னம் முதலிய யாவும் சேர்த்துப் பார்த்தால், ஒவ்வோர் இலைச் சாப்பாட்டின் கிரயமும் குறைந்தது ஐந்து ரூபாய்க்கு மேல் மதிக்கத் தக்கதாயிருந்த ராஜ போஜனத்தைக் காணவே திவான் சாமியார் முற்றிலும் பிரமித்துப்போய் உதவிச் சாமியாரை நோக்கி சந்தோஷமாகப் புன்னகை செய்து, ‘ஐயா சாப்பாடு எப்படி இருக்கிறது பார்த்தீரா ஏராளமான பணத்தைச் சம்பாதிக்கும் வழியை எல்லோரும் தெரிந்து கொண்டிருந்தாலும், அதைச் சரியான வழியில் உபயோகிப்பதற்குச் சிலருக்குத்தான் தெரிகிறது. இதை ஏற்படுத்தி இருக்கும் தர்மிஷ்டருக்கு அளவற்ற சொத்து இருக்கும் போலிருக்கிறது. ஏன் சுவாமிகளே! இந்தப் புண்ணியவான் ஏதாவது வர்த்தகம் செய்கிறாரா அல்லது மிராசுதாரா? இவருக்கு எவ்வளவு சொத்திருக்கும்” என்றார்.

சத்திரத்தையர் “அப்பா இவருக்குப் பணம் மலைபோலப் புரண்டு கிடக்கவில்லை. இவருக்கு ஜீவகாருண்யச் செல்வந்தான் அளவிலடங்காததாய் மகா பிரமாதமாக இருக்கிறது. ஐயாவுக்கு

ஒன்றும் தெரியாது. அம்மாளுடைய சாமர்த்தியத்தினாலும், திறமை