பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 ஏகோஜி காலத்தில் நாணயங்களை அச்சிட டேனிஷ்காரர்க்கு உரிமையை உறுதிப்படுத்தியதாக ஒரு வெள்ளிப்பட்டயம் கூறுகிறது. தஞ்சைத் தரணியில் திருமருகல் முதலாகிய இடங்களில் நாணயங்கள் அச்சிடப்பெற்றன வென்று தெரிகிறது. எனினும் தஞ்சை மராட்டியர் வெளியிட்ட நாணயங்களுள் ஒன்றுதானும் கிடைத்துள்ளதாகத் தெரியவில்லை. மராட்டிய மன்னர் காலத்தில் எல்லா வழக்குகளும் அரசனது அலுவலர் களால் விசாரிக்கப்பெற்றிருத்தல் கூடும். இத்துறை சரியாக இயங்கவில்லை என்பது அந்நாளைய வெள்ளையர் கருத்து. இரண்டாம் சரபோஜி காலத்தில் நிதிமுறை சரிவரப் பேணப்பெற்று வந்தது. நான்கு விதமான சபைகள் தோற்றுவிக்கப்பட்டன. அவற்றுக்கு வேதம் வல்ல சிறந்த அறிஞர் தலைமை வகித்தனர். அவ்வறிஞர் நிர்ணயசிந்து, மனுவிஞ்ஞானேசுவரீயம் முதலாய நூல்களைப் பார்த்துத் தீர்ப்புக் கூறினர் என்று தெரியவருகிறது. பலவகை யான தண்டனைகள் வழங்கப்பெற்றன. இவ்வழக்கு மன்றங்களின் விசாரணை எல்லை தஞ்சை மாநகரமும், முகாசா கிராமங்கள் மட்டுமேயாகும். எஞ்சிய பெரும்பகுதி ஆங்கிலேயர் மேற்பார்வையில் இருந்தமையின், அவர்களுக்கு வெள்ளையர் நீதிபதிகள் நடத்தும் வழக்கு மன்றங்களுடன் சென்னையில் 2 #4 offidairpoph (Supreme Court) பயன்படலாயிற்று. மேலும் சரபோஜி மன்னர் காலத்தில் வயித்திய ஆராய்ச்சி " நடைபெற்றது; ஆரோக்கிய சாலை ஒன்று ஏற்படுத்தப்பெற்றது. பல நோய்களைத் தீர்க்கும் வயித்திய முறைகள் தமிழ்ப்பாடல்களாகப் பல தமிழ்ப்புலவர்களால் யாக்கப்பட்டன. சோத்திரியங்கள் ஆகவும் தானமாகவும் கொடுக்கப்பெற்ற நிலங்கள், அதாவது 'இனாம் நிலங்கள், மொத்தத்தில் நான்கில் ஒரு பங்காகும் என்று கன்னக்கிடப்பட்டுள்ளது. எனினும் அவை மதிப்புக் குறைந்த நிலங்களே யாகும். பெரும்பாலும் "தரிசு" அதாவது பயிரிலியாக இருந்தவற்றையே இன்சமாக அளித்தனர். அவற்றை விற்பனை செய்வதாக இருந்தால் அரசுக்கே அவை விற்பனை செய்யப்பெற்றன. நிலங்களில் 'முகாசா" நிலங்கள் என்றும் சில இருந்தன. அவை இரண்டாம் சரபோஜி காலத்திலிருந்து அரசரது தனி ட்டைமையாகக் கருதப்ப்ட்டன. அவற்றுக்கும் நிலவரி மிகுதியாக இல்லை என்று தெரிகிறது. == - 3. படேவியா அருங்காட்சியக வெள்ளிப் பட்டயம்-1, தஞ்சை மராட்டியர் செப்பேடுகள்-50, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு-1 (1988). 4 * The area wholly or partially exempt from the payment of revenue under the general designation " Imam ” consists of 612085 acres or a little more than one fourth of the entire area of the Dt. ” – P. 673, Tanjore Dt, Manual. 5. “ Mokasa or the private estate of the late Rajah now in the enjoyment of his family being made up of lands which Sarabhoji II retained at the cession of the province. It is wholly exempt from the payment of revenue save the small police fee, the water tax levied for any dry cultivation converted into wet with the aid of Government water and local cess *-P. 680, Tanjore Dt. Manual.