பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209 கி.பி. 1776இல் துளஜாராஜா தங்கத்திலும் வெள்ளியிலும் ஆக34 அல்லாக்களும், தங்கக் குடைகள் இரண்டும் செய்தார் என்ருேர் ஆவணக் குறிப்பால் அறியப்பெறும்." கி. பி. 1773இல் மல்லிம் சாஹேப் என்பார் கடைவீதியில் கோட்டையின் பக்கம் ஒரு மசூதி கட்டினார். அந்த மசூதியை நடத்துவதற்கும் ஃபக்கீர்களுக்கு உணவு அளிக்கவும், சாலியமங்கலம் வட்டத்தில் கடதம்பட்டு என்ற ஊரில் 10229 குழிகளும், வல்லார்பட்டு என்ற ஊரில் 2419 குழிகளும், ஆக 12648 குழிகள் இனாமாக அளிக்கப்பெற்றன." அங்கு ஓர் ஊர் அமைத்து 'முகமதுபுரம்' என்று பெயரிடப்பட்டது. o கி. பி. 1785இல் திருப்பூந்துருத்தியில் 1963 குழி நிலமும், மரஞ்செடி கொடி வகைகளில் நிலம் வேலி 3; மா ஹிஸ்லேக்மல் என்ற ஃபக்கீருக்கு இனாம் அளிக்கப்பட்டது.' சூலமங்கலத்தில் 24 வேலி நிலம் 700 சக்ரம் கொடுத்து விலைக்கு வாங்கி அங்கு தர்கா அமைக்கப்பட்டது. அதனைச் சர்க்கார் ஜப்தி செய்தனர். அந்த தர்கா 'வை ஜப்தியிலிருந்து விடுவிக்கவேண்டும் என்று 1787இல் ஹஸன்ஸா ஃபக்கீர் வேண்டிக்கொண்டவண்ணம் ஆணை பிறப்பிக்கப் பட்டது' இங்ங்னம் மராட்டிய மன்னரிடம் நிலக்கொடைகள் பெற்ற தர்காக்கள் பலவாதல் கூடும். அல்லாப் பண்டிகைக்காக மன்னர் எல்லா தர்காக்களுக்கும் போய் வருதலுண்டு ; அங்ங்ணம் போகுங்கால் இனாம் அளிப்பதுண்டு ' அல்லாப் பண்டிகை நடத்தவும் நன்கொடை அளிப்பதுண்டு ' . " அல்லாப் பண்டிகைக்கு பகிர்களுக்குக் கொடுப்பதற்காக மாதுபூநீ ஆவுசாயேப் ரூ. 30; சைதம்பாபாயி சாகேப் ரூ. 30; காமாட்சியம்பா பாயி சாகேப் ரூ. 25; சுலகூடினபாயி அமணி ராஜேசாகேப் ரூ. 10; சக்வாரம்பா பாயி அம்மணி ராஜே ரூ. 10; ஆக 105" -- என்ற ஆவணக்குறிப்பால் அரசமாதேவியரும் சமயப்பொறையுடையவர் களாய் அல்லாப் பண்டிகைக்கு நன்கொடை அளித்தனர் என்பது போதரும். அப்தர் கானாவில்" ஒரு அல்லா வைப்பதற்கு லாடு' வாங்கிய வகை யில் ரூ.150 என்ற குறிப்பாலும்" அல்லாப் பண்டிகைக்காக அப்தர்கானாவில் 182. 1-154 183. ச. ம. மோ, த. 14-48 184, ச. ம. மோ. க. 14.45 185. ச. ம. மோ, தி. 14-41 186, 2-88, 85, 86; 4.286 187. 1-124 : 4-209 ; 2-281 ; 2-266 188. ச. ம. மோ, த. 8-9 189, தண்ணீர் தேக்கும் இடம். 190, 1-120. 27