பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233 கி. பி. 1776க்குரிய ஆவணத்திலேயே வீணை குறிக்கப்பெறுகிறது. ஹ-ஜாரில் வீணையின் தந்தியை வாங்கிக் கொடுத்ததற்குப் பரங்கிப் பேட்டை வராகன் 8 " - என்ற குறிப்பால் மராட்டிய மன்னர் வீணை வாசித்தலில் வல்லவராய்த் திகழ்ந்தனர் என்பது அறியப்பெறும். "ஜெயபேரிகை (வெற்றி முரசு) எனும் வாத்தியமும் இருந்தது." "செள அகில்யாபாயி இடமுள்ள சங்கீதப்பெட்டி பழுதுபார்க்க ரூ. 7." என்ற குறிப்பால் சுருதிப்பெட்டி அல்லது ஹார்மோனியம் அந்நாளில் இருந்தமை பெறப்படும்." - தம்பூராவும் அந்நாளில் வழக்கிலிருந்தது." ஆங்கில இசையும் பேணப்பட்டு வந்தமையின் ஆங்கிலேய இசைநூல் களும் ஆங்கில நூல்களும் விலைக்குப் பெறப்பட்டன." பெண்களும் மேளம் வாசித்தார்கள் என்று தெரியவருகிறது." பொம்மலாட்டம் அந்தாளில் பரவலாக இருந்தது. இதில் வல்லவர் ராமசெட்டி என்று ஒரு ஆவணத்தினின்று அறியப்பெறும்;" மன்னாரு செட்டி என்று பிறிதொரு ஆவணத்தினின்று அறியப்பெறும்." பொழுது போக்குக்காக வேடம் தரித்து வேடிக்கை காட்டுவதுண்டு. சிலர் ஆட்டுக்கடா, புலி, கரடி, மான், பன்றி, சிங்கம் ஆகிய வேஷங்களைப் போட்டுக் கொண்டு நடித்தனர்." நாட்டியம் ஆண்களும் பெண்களும் நாட்டியம் ஆடினர். நாட்டியக்காரிகளைப் பற்றியும் நட்டுவனார்களைப் பற்றியும் பல செய்திகள் தெரியவரும். கி. பி. 1797இல் காமன் பண்டிகையை முன்னிட்டு நாச்சியார்குடியில் நாட்டியப் பெண்கள் பலர் இருந்தனர். திருவையாறு கோயிலில் நாட்டியப் பெண்கள் எண்மர் இருந்தனர்." மகாராஜா சபையில் நாட்டியங்கள் அடிக்கடி நடைபெறும். தாசி காவேரி பெண் பெரியா, வெங்கடாசலம் பெண் உண்ணாமலை ஆகிய இவர்கள் 1801இல் அரசவையில் நாட்டியம் ஆடினர்." 162. 1-155 163. 4-418 164, 4-226 165. ச. ம.மோ, த. 29.9 166. 2-199 167. 1-249 168. ச. ம. மோ. த. 27.21, 84 169. ச. ம. மோ, த, 4-1 170, 171. ச. ம. மோ. த. 19.85 172. ச. ம. மோ, த 1-9 30