பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 ராஜசாம்பாள்புரச் சத்திரத்திலும் மாணாக்கரிடம் சம்பளம் பெற்றுப் பள்ளிக்கூடம் நடத்தப்பெற்றது.' - - வேற்றுார்களிலிருந்தும் வந்து படித்துச் சென்றனர் சிலர் என்று தெரிகிறது. பெனுகொண்டாவிலிருந்து ரங்கையா என்றொருவர் முக்தாம்பாள் புரம் இங்கிலீஷ் பள்ளிக்கு வந்து படிப்பு முடித்துக்கொண்டு தன் ஊர்க்குத் திரும்பிச் சென்றார். அவர் ஊர்க்குத் திரும்பிச் செல்ல ரூ. 10 அளிக்கப்பெற்ற தாக ஓராவணக்குறிப்பு துவல்கிறது.* ஐரோப்பியர் மட்டும் படிக்கும் பள்ளிகளும் இருந்தன. ஐரோப்பிய பென்ஷன்தாரர்கள் முதலியோருடைய பெண்கள் படிப்பதற்காக நீலகிரியில் தருமப் பள்ளியிருந்தது." இவ்விருவகைப் பள்ளிகட்கும் மராட்டிய மன்னர் உதவிகள் புரிந்தனர். 1829இல் பத்து ஆசிரியர்கட்குச் சிறிது சம்பளம் குறைக்கப்பட்டதாகத் தெரிகிறது; பெயர்களும் குறைப்புத்தொகையும் காணப்படுகிறது ; குறைத்த தற்கான காரணம் கூறவில்லை." நவவித்யாகலாநிதிசாலை எங்கிருந்தது என்ற வினாவெழக்கூடும். அது சரஸ்வதி பாண்டாரத்தில் அதாவது சரஸ்வதி மகாலில் இருந்ததென்பது, - " சரஸ்வதி பாண்டாரத்தில் நவவித்யா கலாநிதி சாலைக்கு இங்கிலீஷ் பள்ளிக்கூடத்துக்கு ' is சரஸ்வதி பாண்டாரம் திம்மதி - சேனாதுரந்தர ராமையா வராஹப் பையா சகம் 1771 கொடுத்த சீட்டு. மேற்கண்ட மகால் நவவித்யா கலாநிதி சாலைக்கு மாத நிஷ்பத்தி 18ஆம் பெருக்குக்காக .........”* என்ற குறிப்புக்களால் தெற்றென அறியலாம். இந்நவ வித்யா கலாநிதி சாலையிலேயே சில மாணாக்கர்கள் தங்கி இருந்தனர் என்று தெரிகிறது. அன்னோர்க்குச் சனிக்கிழமையும் புதன்கிழமை யும் எண்ணெய் தேய்த்துக் கொள்ளவும், துடைத்துக்கொள்ளத் துண்டும், துப்பட்டியும் தரப்ப்ெற்றன." அந்நாளில் உடற் பயிற்சிக்குச் சிறப்பிடம் தந்திருத்தல் வேண்டும் என்று எதிர்பார்க்கலாம். அதற்காக ஆசிரியரும் நியமனம் செய்யப் பெற்றிருந்தனர். ' கவாத்' செய்வதற்கென்று நவவித்யா கலாநிதி சாலையில் தனி இடம் ஒதுக்கப் பெற்றிருந்தது." 27. ச. ம. மோத, 25-22 28. ச. ம. மோ. ச. 4-24 29, 1-162 30. 1-162, 163 31. ச. ம. மோ, க. 4-18 32 ச. ம. மோ. த. 2-28 33. ச, ம. மோ. த. 27.2.4 34. ச. ம. மோ, த. 2-12, 35. 2–188