பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 கிலக்கொடை-சத்திரங்கள்-பலவகை அறங்கள் அ. சுரோத்திரியம் காவிரிப் பாய்ச்சலால் வளம் கொழிக்கும் இந்நாட்டை ஆட்சிபுரிந்த மராத்திய மன்னர்கள் வேதம் வல்லார்க்கும், இசை வல்லார்க்கும், பிறருக்கும் ஆக நிலதானம் செய்துள்ளனர். வேதம் வல்ல பிராமணர்கட்கு விடப்பட்ட நிலம் சுரோத்திரியம் என்று சொல்லப்பெறும். தஞ்சை மராட்டிய மன்னர்களுள் முதல் அரசராகிய ஏகோஜியின் மூன்றாவது மகன் துக்கோஜி அல்லது முதலாம் துளஜா காலத்தில் பல ாேருக்குச் சுரோத்திரியம் அளிக்கப்பெற்றதாகத் தெரிகிறது. " துளஜா ராஜா, கோட்டுர் மாகாணத்தில் அனாதி தரிசுக்கு லசஷ்மி நரசிம்மபுரம் என்று பேர்வைத்து மாதவாசாரியர் ஐவாசாரியர், சீனிவாசா சாரியர் ஆகிய 3 பேருக்கு 5 வேலி சுரோத்திரியம் செய்து கொடுத்தார்." "மேற்படி ராஜா திருத்துறைப்பூண்டி மாகாணத்தில் 8 பேருக்கு ஒரே சன்னது 3 வேலி தாராதத்தம் செய்து கொடுத்தார்." - துளஜா ராஜா பைங்காநாடு 15 வேலி 18 பேருக்குச் சுரோத்திரியம்" என்ற குறிப்புக்களால் முதலாம் துளஜா வேதம் வல்ல அந்தணர் பலருக்குச் சுரோத்திரியம் அளித்தமை பெறப்படும். இந்த நிலங்கள் இராஜ்யத்தின் 1. Srotriya - learned in the Veda, Conversant with sacred knowledge - Sir Monier Monier Williams, A Sanskrit English Dictionary ੋਂ 2. சீர்வார்த்துக் கொடுத்தல் 3. ச. ம. மோ. த. 8-12 4. ச. ம. மோ, க. 5-18