பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

277 தெரிகிறது. இவ்விரண்டு சத்திரங்களுக்கும் இடையில் இருந்த தொலைவு ஒருமைல் கூட இல்லை.4 பிற சத்திரங்கள் போலவே இச்சத்திரத்திலும் வேதம் முதலியன கற்பிக்கப் பட்டுவந்தன. அங்குப் படிக்கும் மாணாக்கருக்கு வேண்டிய நூல்களை (சரஸ்வதி மகாலிலிருந்து) பெற்றுத் திருப்பித்தர வேண்டும் என்று 1814க்குரிய ஓராவணம்" கூறுகிறது. அந்நூல்கள் மாக புராணம், நைஷதம், அமரம் என்பனவாம். இவை சமஸ்கிருத நூல்கள் என்பது வெளிப்படை. சைதம்பா என்பவர் இரண்டாம் சிவாஜிக்கு முன்னதாகவே இறந்தார்.'அ 15.அ. கும்பகோணம் மகாமகக் குளத்துக்கு அருகில் ஒரு அன்ன சத்திரம் இருந்ததாகக் கி. பி. 1785க்குரிய ஆவணக் குறிப்பால் அறியப்பெறும்." 15ஆ. பாயிமார்களில்" அன்னபூர்ணா பாயி, மணிகர்ணிகா பாயி என்னும் இருவர் 600 சக்கரம் கொடுத்தனர். அதன் வட்டியில் திருவையாற்று அன்னசத்திரத்தில் இரவில் வரும் பரதேசி பிராமணர்கள் மூன்று பேருக்கு உணவு அளிக்கத் திட்டம் வகுக்கப்பெற்றது." 16. லசஷ்மீராஜபுரம் சத்திரம் இங்குள்ள கோயில் அமிர்த கடேசுவர சுவாமி என்கிற தளிகேசுவர சுவாமி கோயில் ஆகும்." அமிர்தராவ் ராமோஜி ஸர்ஜேராவ் காட்கே என்பவரின் தந்தை தளிகேசுவரர் கோயிலை எடுப்பித்தார்; லக்ஷ்மீராஜபுரம் அக்கிரகாரம் அன்ன்சத்திரம் ஆகியவற்றை உண்டாக்கினார்; பூசை நிவேதனத்துக்காகத் தன் சம்பளத்தில் 50 சக்கரமும், அன்னசத்திரத்துக்காக 15 சக்கரமும் கொடுத்தார். இத்தருமங்களை நிறுவியவர் இரண்டாம் சரபோஜி மகாராஜாவின் தமக்கை கணவர் ஆவர்." லகஷ்மீராஜபுரம் என்பது வெண் ணாற்றங்கரை வடபகுதி பள்ளியக்கிரகாரம் ஆதல் வேண்டும். இச்சத்திரம் கி.பி. 1818இல் அமைக்கப்பெற்றது. இவற்றை எடுப்பித்தவர்கள் பரிபாலனத்திலேயே இவை இருந்தன." கி. பி. 1856இல் சேனா துரந்தரர் நீலகண்டராவ் ஆனந்தராவ் ஜாதவ் என்பவர் சத்திரங்களின் செயல்முறை பற்றி ஒரு சுற்றறிக்கை விடுத்து உள்ளார்." அதனுள் சத்திரங்கள் எவ்வாறு செயல்படவேண்டும்; அங்கு 127 Page 1, Past & Present Administration of the Rajah's Chatrams — The Chatrams of Sydambalpuram and Surakkottai have since been amalgamated under G. O. No. 1226, L. Dis. dated 5–9–1907. They lay . . within a mile of each other. 128, 5-807 1282. Tanjore Manual V, paragrah 66 129. 2–12 130. ச. ம. ம்ோ. த. 4-41 131. த. தி. பக்கம் 46 132, 4-479, 480 133. த. தி. பக்கம் 46 134, 5-215 135. த. தி. பக்கம் 46 136 8-280 முதல் 287 வரை; ச. ம. மோ, த. 6-82