பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 இலகஷம் பிராமண போஜனத்துக்குச் சாமான் வாங்கச் சக்கரம் 5,000 என்ற குறிப்பால்' கி.பி. 1801இல் லக்ஷம் பிராமணர்கட்கு உணவளிக் கப்பட்டது என்பது போதரும். மேலும் இதேயாண்டில் முத்துலகஷ்மி பாயி என்பவர் தாஸ்தான் " மகாலில் "லக்ஷ பிராமண போஜனம் " நடத்திய தாகத் தெரிகிறது." மேலும் இத்தகைய பெருந்திட்டங்கட்கு மராட்டிய மன்னர் பிறருக்கு உதவி புரிந்தமையும் தெரியவருகிறது. மைசூர்ப் புரந்தர தாச ருடைய வழியில் வந்தவர்- சீனிவாச கிருஷ்ணதாஸ் என்ற பெயருடையவர் லக்ஷம் பிராமண போஜனம் நடத்த உதவி வேண்டினார். 1000 பேருக்கு வேண்டிய உணவுப்பண்டங்கள் கொடுக்கப்பெற்றன." இது 1842க்குரியது.

  • .

5. தண்ணிர்ப் பந்தல்: தண்ணீர்ப் பந்தல் அமைத்து வேனிற் காலத்தில் பங்குனித்திங்கள் முதற்கொண்டு மூன்று முதல் ஆறு மாதங்கள் பயணிகட்கு நீர் வார்த்தல், நீர்மோர் வார்த்தல் ஆகியவை இந்நாட்டில் பெருவழக்காய் இருந்து வரும் தருமங்களில் ஒன்றாகும். மூன்று மாதங்கள் தண்ணிர்ப்பந்தல் தருமம் நடத்துவது பெரும்பான்மை. முதலாம் இராசராச சோழனது உக்கல் கல்வெட்டினின்று தண்ணிர்ப்பந்தல் தருமம் ஆறுமாதங்கள் நடக்கும் என்று தெரிகிறது. ஆனால் இரண்டாம் சிவாஜி காலத்தில் தஞ்சாவூரில் 12 மாதங்களும் தண்ணிர்ப் பந்தல் நடத்தப்பெற்று வந்தது எனத் தெரிகிறது." 8 தில பர்வத தானம்: பத்துத் தானங்களில் எள்ளைத் தானம் செய்வதும் ஒன்று. தானம் பெறும் பிராமணர்கள் எள்ளைத் தானம் பெற்றுக் கொள்வதற்குச் சிறிது தயங்குவர். எள் தானம் பெறுபவர் அதிக தட்சணை கொடுத்தால் பெறுவதற்கு இசைவு காட்டுவர். ஆகவே எள் தானம் கொடுக்கும் பொழுது அதிக தகூதிணை கொடுத்தமை ஓராவணக் குறிப்பினால் அறிய வருகிறது." "சனிசுவர பீடா பரிஹாரார்த்தம் ஆயுஷ்யாபி விருத்தியர்த்தம் சத்சந்தான சித்தியர்த்தம் திலபர்வததானம்" - முக்கியமான திலபர்வத தானம் வாங்கும் பிராமணர்கட்குத் தகூடிணை 500 சக்கரம்; மற்ற பர்வத தானம் வாங்குவோர்க்கு 200 சக்கரம் " ட இக்குறிப்பு 1784க்குரியது. பிறவற்றைத் தானமாகப் பெற்றவரைக் 159, 2.127 : ( இலகடிம் பிராமணர்கட்கு உணவளித்தமைபோல் பெரியகோயில் சுவாமிக்கு லக்ஷம் எருக்கம்பூ அருச்சனை ; கொங்கணேசுவரர் கோயில் சனிசுவரருக்கு ஒரு லக்ஷம் செம்பரத்தம்பூ பிரதாப வீர அனுமாருக்கு லக்ஷம் துளசி - ஆகியவை அருச்சனை செய்யப்பெற்றன: 2–166) 16O. 2–165 161. ச, ம, மோ. த. 2-41- 162. 12-108 163. ச. ம. மோ, த. 9-19 164. " சனி என்னும் கோளால் ஏற்படும் துன்பங்களைப் போக்குதற்பொருட்டும், ஆயுள் வளர்தற் பொருட்டும், கன்மக்கட் பேற்றுக்கும் ஆக மலையளவு எள் தானமாகக் கொடுத்தல்'- என்பது இதன் தமிழாக்கம் ஆகலாம்.