பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 வண்டி மாடு பாரத்தை இழுத்து மார்பில் இரத்தம் கட்டி மாடு நொண்டியதால் உள்ளுக்குக் கொடுக்கக் கர்க்கம், கோழி மசாலை ஆகிய வற்றைச் செய்யப் பின்வரும் மருந்து பொருள்கள்." "சுக்கு, மஞ்சள், மல்லி, குக்கில், மிளகு, வெந்தயம், கரியபோளம்இவை ஒவ்வொன்றிலும் 9 டாங்க், அதலிவ் 4, டாங்க் சாராயம் 1 சேர் பூண்டு ஆசேர்; உகேமலி 4, டாங்க், தஞ்சாவூர் சுங்கத்திலிருந்து தினம் ஒரு கோழியைக் கொடுக்க " (கர்க்கம் - மருந்து உருண்டை) வண்டி மாட்டுக்கு வாயுவினால் தொல்லை ஏற்பட்டது. அதற்கு உள்ளுக்குக் கொடுக்கிப் பின்வரும் மருந்துப்பொருள்கள் வேண்டிவந்தன." "சுக்கு, மிளகு, வசம்பு, மரமஞ்சள், சித்தரத்தை, ஓமம் ஆகியவற்றுள் ஒவ்வொன்றிலும் 9 டாங்க், பூண்டு சேர் ." மாட்டுக்குக் காலில் கட்டி புறப்பட்டுக் கால் வீங்கியது; அதற்கு வயிற்றில் கொடுப்பதற்கு மருந்து செய்யச் 'சுக்கு, சித்தரத்தை, கடுகு ரோகிணி, மிளகு, ஓமம், கருஞ்சீரகம் ஒவ்வொன்றிலும் 9 டாங்க் காயம் 1 டாங்க், பூண்டு, ஈசுவரவேர், சித்திரமூலம், சோப்சீனி ஒவ்வொன்றிலும் சேர்” ஆகியவை குறிக்கப்பட்டுள்ளன." ஒரு காளைமாட்டு வாயிலிருந்து மஞ்சள் நிறமாக நீர் ஊறியது. அதை நிறுத்தப் பின்வரும் மருந்து சரக்குகள் கொண்ட மருந்து தயாரித்து மூன்று நாள் கொடுக்குமாறு மருத்துவக் குறிப்பு (Recipe) உள்ளது:" மிளகு சீரகம், வெந்தயம், ஒவ்வொன்றும் 9 கழஞ்சு" வெங்காயம் சேர்; நெய் 1 சேர்." மாடு சூடு (வெப்பம்) காரணமாக இருமினால், 'சுக்கு 9 கழஞ்சு: வெல்லம் சேர்; மஞ்சள் 9 கழஞ்சு, கள்ளு 1 சேர்" ஆகியவற்றால் ஆகிய மருந்து 3 நாட்கள் கொடுக்குமாறு ஒரு குறிப்பு உள்ளது." வருமுன் காத்தலாக, வெக்கை கடுவை ஆகிய வியாதிகள் வாராமல் இருக்க லாயத்தில் இருந்த 211 காளைமாடுகட்கு 7 நாட்களுக்கு மசாலை செய்து கொடுக்கப் பின்வரும் திட்டம் வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது:" _ கச்சேகருவாடு நாளொன்றுக்கு 9 டாங்க் வீதம் 264 சேர் 9 தோலா, வெங்காயம் 9 டாங்க் வீதம் 6: சேர் 9 தோலா தயிர்படி 105; சீரகம் கித் டாங்க். வீதம் 13 சேர் 13 தோலா வெந்தயம் 4, டாங்க் வீதம் 13 சேர் 13த் தோலா." 59. 1-178, 179 60. 1-295, 296 61. 2–257, 258 62. 2–2.15 63. கழஞ்சு - 40 குன்றிமணி எடை 64. 2-216 65, 1–278