பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 மணிகளைக் கொடுத்து ஆரத்தி எடுப்பது வழக்கம். அப்பொழுது தங்கைக்குத் தமையன் ஆரத்தித் தட்டில் பணம் போடுவார் ' என்பதாகும். கெளரி பூஜை "1786 : செள. பவானி பாயி சாயேபு அவர்கள் கெளரி பூஜைக்கு மஞ்சள் குங்குமம் பங்களா மஞ்சள் மெழுகு, சீப்பு 100, தோடுகள் 100, தாலிகள் 100, டப்பாக்கள் 100, கொண்டக்கடலை 15 படி, புஷ்பம், அபீர் தாண்டா 5, ஹாரம் 5, பலா 8, விசிறி 100” - என்ற குறிப்பினால் இப்பூசை செய்யுங்கால் நூறு சுமங்கலிப் பெண்டிர்க்கு மஞ்சள் குங்குமம், சீப்பு, தோடு, தாலி, பழம் முதலியவற்றுடன் தாம்பூலம் அளிக்கப்பெறும் என்று தெரிகிறது. இதனை மகாலெட்சுமி பூசை என்றும் கூறப்படுவதுண்டு என்றே தோன்றுகிறது." - " 1828 : ஸ்ராவண சுத்த திருதியை கல்யாண மகால் ஸ்வர்ண கெளரி விரத கிரகண உத்யாயனம்” என்றொரு குறிப்பு உள்ளது. எனவே இவ்விரதம் " சிராவணம் " (ஆவணி) மாசத்தில் செய்யப்பெறுவது எனத் தெரிகிறது. "1828 : கல்யாண மகாலில் உபாங்க லலிதா விரத கிரஹண உத்யாபனம் செய்தது, ஸர்வதாரி ஆச்வீஜ சுத்த பஞ்சமி ' என்ற குறிப்பால் உபாங்க லலிதா என்ற ஒரு விரதம் உண்டு என்றும், அது ஆச்விஜ (புரட்டாசி) மாசத்தில் சுத்த பஞ்சமியில் நடைபெறும் என்றும் தெரியவரும்.' ஹரதாளிகா விரதம் இவ்விரதம் சுமங்கலிகள் நடத்துவது. பாத்ரபத மாசம் சுக்லபக்ஷம் திருதியையில் நடைபெறும்' என்றும், சிவ பார்வதிக்குப் பூசை நடத்தப் பெறும் என்றும் தெரிகிறது. 9 “Bow biz is the feasting of a brother by a sister and vice versa. It is done on Karthikais, 2nd, 6th day after Deepavali" - page 38Deposition of M. S. Ghantigai, O.S. No. 26 of 1912 10, #.u.Gam.45. 8-28 11. “ Mahalakshmi Pooja is the same with us as Gowri pooja ” – P. 31 - Deposition of M. S. Ghantigai, O. S. No. 26 of 1912 12. ச. ம. மோ. த. 10-85 13. ச. ம. மோ, த. 10.85 14. " In Asvijam Upangalalitha on S. 5th ** - P. 186, line 15 - Deposition of Swaminatha Sastrigal – D. W. 24, O. S. 26 of 1912. 15, " Harathalika is on Bhadrapatha S. 3rd by Sumangalis" P. 30. M. S. Ghantigai, O. S. 26 of 1912 16. " In Harithalika, Pooja is made to Siva Parvathi”.-P. 19, M. S. Ghantigai, O. S. 26 of 1912