பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 ஊதியப் பிடித்தம் அரசு ஊழியத்தில் இருப்பவர்கள் விடுப்புப் பெற்றுச் செல்லவேண்டும் என்பது பொது விதி. சில சமயங்களில் உடல்நலம் காரணமாக நின்றாலும் சம்பளப் பிடித்தம் செய்வதுண்டு என்று தெரிகிறது. பதில் ஆளுக்குச் சம்பளம் கொடுத்தற்காகச் சம்பளம் பிடித்தம் செய்வர்." ஒவ்வொரு சமயத்தில் வழிவழி ஊழியம் செய்பவராகவும் பெரிய குடும்பத்தையுடையவராகவும் இருந்தால் இக்காரணம் காட்டிச் சம்பளம் பிடித்தம் தவிர்க்குமாறு வேண்டினால் சம்பளம் தரப்பெறும்." சிவபூசைக்கு நாடோறும் சிவலிங்கம் செய்து கொடுத்தல் “ லிங்கம் செய்பவர் இவர்கள் ஹாஜுர் பூஜைக்கு லிங்கம் செய்து கொடுக்கும் வேலை தவறிவிட்டதால் குற்றம் செய்தவர் 1. ராஜம்பட் பானுபட் 2. வெங்கட் பட் பானுபட் " என்றொரு குறிப்பு உள்ளது. இதனால் நாடோறும் பூசைக்குச் சிவலிங்கம் செய்துதருவர் என்றும் அதனைச் செய்து கொடுக்கத் தவறிவிட்டதால் ஒன்றும் அரையும் ( பணம் ? ) அபராதம் விதிக்கப்பட்டனர் என்றும் அறியப்பெறும். காலம் சரியாகத் தெரியவில்லை. நாடோறும் லிங்கம் செய்து கொடுப்பவர் என்றமையால் மரத்தினாலோ விபூதியினாலோ மண்ணாலோ சிவலிங்கம் செய்துகொடுத்தனர் போலும். இரண்டாம் சரபோஜி சிறந்த சிவபக்தர்' ஆகலின் சரபோஜியின் சிவபூசைக்கு நாடோறும் சிவலிங்கம் செய்து கொடுத் தனர் ஆதல் வேண்டும். 6-374 13. 6-275 14, 12–159 15. ' பூசித்தற்குரியவை பாணலிங்கமும் ஸாளக்கிராம லிங்கமும், ரத்னங்களால் செய்யப் பட்ட லிங்கங்களும் ஆம். இவற்றால் லிங்கங்கன் அமைக்கவில்லை எனில் தாமிரத்தா லாவது பித்தளையாலாவது கல்லினாலாவது அல்லது மண்ணாலாவது அமைத்துக் கொள்ளலாம். மண்ணால் ஆவது சிறப்புடையது அல்ல. எனினும் ' பிருகிவியினா லாகிய லிங்கத்தை அருச்சனை செய்தால் அவன் மீண்ட ஆயுளையுடையோனும் பலமுடையோனும் புத்ரவானும் தனவானும் சுகியுமாயுமிருந்து வேண்டிய வரத்தைப் பெறுவான் - வேதசாஸ்திர தத்துவம் -4ஆம் பாகம் - ங்க். 16, 17, மருதூர் கனேச சாஸ்திரி, 1918. 16. இவரது சிவபக்தியைப் பின்வரும் சரபேந்திர பூபால குறவஞ்சி காடகப் பகுதியால் அறியலாம் : " சித்தபரி சுத்தருக்குத் தேறுசிவ பக்தருக்குச் சத்துவ குணத்தவர்க்குத் தண்மதி முகத்தருக்கு " (4) செஞ்சுடர் உதிக்குமுன் எழுந்து புனல்படிந்து திரு.ே றணிந்து ருத்திராக்ஷ மணிபூண்டு கெஞ்சினில் எழுமன்பி னோடு சக்திவந்தனம் கிலைகரு சிவபூசை புரிகுவ ருடனாண்டு ' (27)