பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 சகுனம் பார்த்தலுக்கு உதாரணம் ஆகும். ' திவான் சாகேப் அவர்கள் வேட்டைக்குப் புறப்படும்போது எதிரில் பாற்குடங்கள் கொண்டுவந்த குடியா னவனுக்கு 2 அனா "அ என்ற குறிப்பும் இதற்கு எடுத்துக்காட்டாகும். துராய்மை காத்தல் சிவகங்கைக் குளத்தில் இரண்டு பெண்கள் குடங்களை அலம்பி னார்கள். அவர்களுக்கு 4; சக்கரம் அபராதம் விதிக்கப்பட்டது.". இதை அறியும் பொழுது தண்ணிரைத் தூய்மையாக வைத்திருக்க எடுத்துக் கொண்ட நடவடிக்கை நன்கு விளங்கும். பிரபந்த வழிபாடு கோயில்களில் திருவிழா நடக்குங்கால் சுவாமி ஊர்வலம் வரும்பொழுது சிவன் கோயிலாயின் ஓதுவார்கள் தேவாரம் ஓதிவருதலும், பெருமாள் கோயி லாயின் பாகவதர்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தம் விண்ணப்பித்தலும் தொன்று தொட்டு வந்த பழக்கமாகக் கொள்ளலாம். " திருப்பதியம் விண்ணப்பம் | செய்தமைக்கு மோடி ஆவணக்குறிப்பு இல்லை. ஆனால் திவ்யப்பிரபந்தம் ஒதியமைக்குச் சான்றுளது : ': 1779 : மன்னார்குடி ராஜ கோபால ஸ்வாமிக்குத் தேர்த்திருவிழா வகையில் ஸ்வாமிகூடவே பாட்டுப்பாடும் பாகவதர்கள்-இவர்களுக்கு அங்க வஸ்திரம் ஜோடிகள் முதலியன கொடுக்க இனாம் வருட வழக்கத்தில் கொடுப் பதுபோல் சக்கரம் 50. இதற்கு 1777இல் கொடுக்கப்பட்டிருக்கிறது" இதனால் மன்னார்குடி ராஜகோபாலசுவாமிக்கு நடைபெறும் திருவிழா வில் நாலாயிர திவ்யப்பிரபந்தம் சுவாமி புறப்பாட்டில் சேவை செய்துவர அரண்மனையார் ஆண்டுதோறும் 50 சக்கரம் அ ளி த் த ன ர் ஆதல் வேண்டும் என்பது அறியப்பெறும். மழை பெய்ய மழையில்லாமல் போனால் மழை வருவிப்பதற்காக வருணஜெபம், உருத்திராபிஷேகம் செய்வித்தலுடன், மாபாரதத்தில் விராடபர்வம் வாசிப்பது வழக்கம் என்று சில ஆவணங்களால்" தெரியவருகிறது. பெண்களுக்கு வேலை அரண்மனையில் பல்வேறு பணிகளில் பெண்கள் ஈடுபட்டிருந்தனர். எனினும் ஐரோப்பியப் பெண்களுக்கும் கிழக்கிந்தியப் பெண்களுக்கும் வேலை கொடுக்கக்கூடாது என்று 16-10-1949இல் ஓராணை" பிறப்பிக்கப்பெற்றது. 53. 4-222 53.அ. ச. ம. மோ. க. 9–13 54. 4-426 55. ச. ம. மோ, க. 18-28. 56. 2.- 181 57. 5–259, 25: