பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35? ஆடுகள் சண்டை இடுதலைக் காண்பதும் வழக்கம்போலும். " பெருமாள்நாயக்இடம் சண்டையிடும் ஆட்டுக்கடா வாங்கினதற்கு 3. சக்கர ம் בחייו என்பதால் இது அறியப்பெறும். ' கி. பி. 1803 : மகாராஜா.சபையில் 10 ஜோடி மல்லு ஜட்டிகள் குஸ்தி போட்டதற்கு இனாம் 720 சக்கரம்" '1846 : நவராத்திரியில் திவான்சாகேப் மகாராஜ சபையின் மேற்குப் + == *. #. + + - + - o * -- i. பக்கம் மேன்டயிட்டுச் சண்டையிடும் குத்துச் சண்டை வீரர்கள் சண்டை யிடச்செய்த வகையில் இனாம் 350 ' என்ற குறிப்புக்களால் மல்லர்களைக் கொண்டு மற்போர் செய்வித்துக் காண்டலும் மன்னர்க்குப் பொழுது போக்காதல் பெறப்படும். To - ** அரசர் முன்னிலையில் " ஜால வித்தை காட்டுதல்" உண்டு. விகட கவிகள் என்பார் பலர் இருந்தனர். அவர்களும் தம் ஆற்றல்களைக்காட்டி நகைச்சுவை பொருந்தப் பேசி மகிழ்விப்பர். "சர்க்காரின் விகடகவி இருவரும் வேஷம் பூண்டு வந்ததற்கு இம்ை"க என்ற குறிப்பால் வேடம்பூண்டு வருதலும் உண்டு என்றறியலாம். கேட்பாரற்ற பொருள்கள் மாடு முதலியவையோ பிற பொருள்களோ சொந்தம் கொண்டாடப் படாமல் இருந்தால் அவைபற்றி எடுக்கப்படும் நடவடிக்கையை ஒரு ஆவணம்' குறிப்பிடுகிறது. எட்டு நாட்களாக வெள்ளைக் காளை மாடு ஒன்று அரண்மனைக்கு வந்திருக்கிறது. அதற்குரியவர் ஒருவரும் வரவில்லை. மூன்று வாரக்கெடுவில் உரியவர்கள் வந்து கொண்டுபோகாவிட்டால் ஏலம் போடப்படும் ' என்று எழுதி விளம்பரம் செய்து கெடு ஆனதும் ஏலம் ப்ோடு மாறு ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதனால் கேட்பாரற்ற பொருள்கள் ஏலத்தில் விடப்பெறும் ஒழுகலாறு தெரியவரும். திருமணம் பற்றி பரிசம் போட்டுக் கலியாணம் செய்து கொள்ளுதல், பூப்பு எய்துவதற்கு முன்னமேயே கல்யாணம் நடத்துதல்," காணாத்தாலி கட்டுதல் ஆகியவையும் அந்நாட்களில் நடைபெற்றன. 68. ச. ம. மோ. த.9-9 69. 1-55 70. ச. ம. மோ. த. 27-80 71. 1-120.4-8 55 71அ. 4-247, 2.275, 276; 2-54; 1-249 72. ச.ம.மோ.த 4–89 73. ச. ம. மோ, த. 6-881 74. 6-885 75, 6–425