பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

379 திருவுருத்திர மந்திரத்தை ஓதிக்கொண்டு தண்ணிரை அபிஷேகம் செய்தலே ருத்ராபிஷேகம் எனப்பெறும் திருவுருத்திரம் வேதத்தில் நடு நாயகமாக இருக்கும் மந்திரம்' ஆகும். வருனஜெபம் என்பதும் மழைக் குரிய கடவுள் ஆகிய வருணனை நோக்கி வேத மந்திரங்களை ஒதுவதாகும். தஞ்சைப் பெரிய கோயிலில் மட்டும் அன்றி, மழையின்மையால் பாதிக்கப்பெற்ற இடங்களிலும் வருண ஜெபம் முதலியன நிகழ்த்தப்பெற்றன என்று மேற்கூறிய ஆவணக்குறிப்புக்கள் உணர்த்துகின்றன. -- சில ஆண்டுகளில் அளவுக்குமேல் மழை பெய்தமையும் தெரிகிறது. 1812 இல் மாயவரம் பேரளத்தில் வெள்ளச்சேதம் ஆகையால் குத்தகை தள்ளிக்கொடுத்ததாக ஒருகுறிப்பு உள்ளது." 1826இல் பெருமழை, தஞ்சை முழுவதும் உள்ள பெருஞ்சாலைகள் மிக்க பழுதடைந்தன. ஆகவே அவற்றைச் செப்பனிட்டதாக ஒரு செய்தி தெரியவருகிறது." 1843இல் எட்டுநாட்கள் விடாது மழை பெய்ததாகவும் சர்வமானியம் அன்னம்பேட்டையில் சாகுபடிக்கு விட்ட நாற்றும் ஆற்று வெள்ளத்தால் சேத மாகிவிட்டது என்றும் அவ்வாவணக் குறிப்பால் அறியப்பெறும்" தொன்மைநாடு கிராமத்தில் ஆலத்தியேரி என்றொரு ஏரி. அதில் வடிமடை மேட்டில் வெட்டி விட்டதால் தண்ணிர் வடியாமல், தண்ணிர் தேங்கி, 40 வேலி நிலத்தில் நஞ்செய்ப் பயிர்கள் சேதம் அடைந்தன. ஆகவே வடி மடையை வெட்டிவிட வேண்டும் என்று ஆழியவாய்க்கால் என்ற ஊரவர் வேண்டினர். நியாயசபை நியாயாதிபதி அரிசக்கரபாணி என்பவர், ஆழியவாய்க் கால் கிராமத்தில் இருந்த இருவருடன் கண்ணங்குடி மேலையூர் மிராசுதார் களை நன்செய்ப் பயிர் நிலைமையைப் பார்க்குமாறு கட்டளை இட்டார். அவர்கள் தென் - வட வடிகால்களில் தண்ணிர்ப்போக்கைக் கண்டனர். தென்மடை ஓட்டமில்லை. நடுகீழ்க்கரையில் வடிமடை இருந்தால் தண்ணிர் வடியும். மற்ற ஏரிகள் போலத்தான் இங்கும் வடிமடை உண்டு. ஏரித் தண்ணிர் எதிர்ப்பினால் பயிர்ச்சேதமில்லை. ஆழியவாய்க்கால் சாகுபடி செய்யப் பெற்ற நன்செய்ப் பயிர்களுக்கும் சேதமில்லை-என்று கருத்துத் தெரிவித்தனர்." இது 15-12-1831க்குரியது. 17. திருவுருத்திரத்தின் சிறப்பை ' ரீருத்திராக்யாய' என்ற கட்டுரையில் காணலாம்: பக்கம் 57-74; ' கல்லெழுத்துக்களில் - கே. எம். வேங்கடராமையா (1966) 18. ச. ம. மோ. க. 2-9 19. ச. ம. மோ. க. 4-8 20. 12–112 21. 7–773 முதல் 776 வரை,