பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 ராயல் ஏஷியாடிக் சொஸைட்டியின் (Royal Asiatic Society) கிளைகள் கல்கத்தாவிலும், சென்னையிலும், பம்பாயிலும் நிறுவப்பெற்றன. அப்பொழுது சரபோஜி II அதன் சென்னைக்கிளையில் ஒரு அங்கத்தினராக 31-1-1830இல் சேர்த்துக்கொள்ளப்பெற்றார் என்று ரெஸிடெண்டு ஜான் ஃபைஃப் வழி அறி விக்கப்பெற்றது. இங்ங்னம் தனக்குப் பெருமை தந்தமைக்கு நன்றிகாட்டிச் சரபோஜி அரசர் சென்னைக் கிளையின் செயலருக்கு 30-8-1830இல் கடிதம் எழுதினார். சரபோஜியின் காலத்தில் வக்கீலாக இருந்தவர் கோபாலராயர் என்று தெரிகிறது." சரபோஜியின் இறப்பும், சிவாஜி பட்டாபிஷேகமும் : இவைபற்றிக் காணும் குறிப்புப்" பின்வருமாறு :- "சரபோஜி மகாராஜா அவ்ர்களுக்கு உடம்பு சரியில்லாமலிருந்து உபத்திரவம் அதிகம் ஆகிவிட்டபடியால் பகல் 6 நாழிகைக்கு மாடியிலிருந்து கிருஷ்ணவிலாஸுக்குக் கொண்டுவரப்பட்டார். உடனே எல்லா மகால்களும் எமீல் வைக்கப்பட்டன. சாயந்திரம் பட்டாளம் ஜனங்கள் நாலா பக்கத்திலும் காவல் வைத்தார்கள். இரவு 6 நாழிகைக்குப் பிராயச்சித்தம் கொடுக்கப்பட்டது. பிறகு 11 நாழிகைக்கு மகாராஜா கைலாஸ் வாஸியானார். காலையில் முன்கண்டபடிக்குத் தண்டோரா அடிக்கப்பட்டது. பிறகு 7 நாழிகைக்கு எல்லா சேனைகளுடன் கைலாசவாசி சரபோஜி மகா ராஜாவின் உடம்பு கோட்டைக்கு வெளியே கொண்டு போகப்பட்டது. அலிதர் வாஜா வடக்கு ஆஜரத்தில் 21 துப்பாக்கிகள் சுடப்பட்டன. அக்னி சமஸ்கார சமயத்தில் அவருடைய வயது 54 துப்பாக்கிகள் சுடப்பட்டன. " மகாராஜா இறந்த 12ஆம் நாளன்று 10ஆம் நாள் காரியம் நடந்தது. 13ஆம் நாள் 11ஆம் நாள் காரியம் நடந்தது. 14ஆம் நாள் 12ஆம் நாள் காரியம் நடந்தது.' "மகாபூரீ சிவாஜி பட்டாபிஷேகம் 7 நாழிகைக்குப்பிறகு 11 நாழிகைக்குள் நடந்தது.” - inferior or dependent women of which latter 8 are now alive. The Rajah made a liberal provision for all of those women collectively in the shape of an endowment in landed and funded property but at the same time took care to provide that as lapses occured among the inmates of the seraglio, the accumulated surplus of the income and eventually the entire endowment with the splendid palace which he had erected for the residence of the women should be appropriated for charitable purposes” Pages 826-827; The Tanjore District Manual. 95. 5.228 முதல் 281 வரை 96. 5-484 97. ச. ம. மோ. த. 10. 14-15