பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

393 சரபோஜி காலத்துக்கு முன்னரே சர்க்காருக்குக் கப்பல்கள் இருந்திருத்தல் கூடும். எனினும் உறுதியாகச் சொல்வதற்குரிய சான்று கிடைக்கவில்லை. இரண்டாம் சிவாஜி காலத்தில் சர்க்கார் கப்பல் ஒன்றை ஜேம்ஸ்ரோஸ் என்பவருக்கு 7 ஆண்டு ( பத்தா கூலிக்கு ) வாடகைக்கு விடுவதற்குரிய ஒப்பந்தம் பற்றியும் அது பற்றிய வழக்குப்பற்றியும் ஆவணங்கள் கிடைத் துள்ளன. அ சரபேந்திர ராஜபுரத்தில் சர்க்காருக்குரிய கப்பல் இருந்தது. அக் கப்பலைப் பார்த்தபொழுது அதிகமாய்ப் பழுதுபார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருதப்பட்டது. சில இடங்களில் செப்புத்தகடுகள் போயிருந் தன; தார்பூசல் வேண்டும்; கோழிவெட்டிக் கடலில் தள்ளவேண்டும். இவற்றுக்கு ரூ. 200 செலவாகும். கப்பலுக்குரிய செலவுகள் யாவும் செய்துகொண்டு ஆண்டொன்றுக்கு ரூ. 6000 (பத்தா கூலி) வாடகை கொடுப்பதாக ஜேம்ஸ் ரோஸ் என்பவர் 25-1-1838இல் கடிதம் எழுதினார்." - = அதன்படி 16-7-1838இல் சரபேந்திரராஜபட்டணம் மத்தியஸ்தர் கனகசபையாபிள்ளைக்கு ஜேம்ஸ் ரோஸ் " கப்பல் பத்தாகூலி உடன்படிக்கை " எழுதிக்கொடுத்தார். அந்தப் பாய்மரக் கப்பலுக்குப் பெயர் ' பிரகதீசுவர பிரசாத் என்பதாகும். பத்தாகூலி ஆண்டொன்றுக்கு கு. 6000; ஆண்டு தோறும் பழுதுபார்க்கும் செலவு ரூ. 400, போக மீதி ரு. 5600 கொடுப்பது ; :ால்மன் தீவுகஅ முதலாகிய தீவுகட்குப்போய்க் கொண்டுவந்த பொருட்களில் சர்க்காருக்குத் தேவையான பொருட்களின் விலை போக எஞ்சிய தொகையை ஆண்டுதோறும் ஜூன் 17ஆம் நாள் செலுத்தவேண்டும். பழுது பார்க்கும் செலவு 1200 ரூபாய்க்கு மேற்பட்டுவிட்டால் பழுது பார்த்த இடத்தில் இருந்தவர் களின் கையெழுத்துடன் கணக்குக் கொடுத்தால் பத்தாகூலியில் கழித்துக் கொள்ளலாம். சென்னையினின்று கப்பலுக்காகப் பெறவேண்டிய சீட்டை Pass) நகல் எடுத்துச் சர்க்காரிடம் கொடுக்க வேண்டும். கப்பலுக்கு எதிர்பாராதவண்ணம் தெய்வத்தானாதல் அரசானாதல் ஏதாவது கெடுதி ஏற்படின் அது சர்க்கார் பொறுப்பு - இங்ங்னம் உடன்படிக்கை எழுதிக் கொடுத்தார் ஜேம்ஸ் ரோஸ்." ஜேம்ஸ் ரோஸ், சர்க்கேல் பாவாஜி ராமாஜி பண்டிட் அவர்கட்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதிலிருந்து சர்க்காருக்கும் ஜேம்ஸ் ரோஸ்"க்கும் கப்பல் பழுதுபார்ப்பது பற்றி மனவேற்றுமை ஏற்பட்டதாகக் தெரியவருகிறது. 14.அ 6-11 முதல் 87 வரை 15. 6-11 முதல் 14 வரை 15_ாலமன் என்பது கிழக்கு இந்தியத் தீவுகளில் கியூகினியா தீவுக்குச் கிழக்கில் உள்ளது 15. 5-16 முதல் 20 முடிய 50