பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

395 பெறுவதுண்டு. பல வெள்ளி நகைகட்கும் தங்க மூலாம் பூசுவர். 1827க் குரிய ஆவணம் ஒன்று தங்க மூலாம் பூசுதலைப் பற்றியதாக உள்ளது. அது பின்வருமாறு: 'முலாம் வேலையில் கை தேர்ந்தவன் வெங்கிடசாமி திருமலை என்று ஒருவன் இருந்தான்; பொய்க் காரணம் கூறி விடுமுறை பெற்றுத் திருச்சிக்குச் சென்றான்; துறையூரில் இருந்து அரங்கநாதப் பெருமானுக்கு உபயமாகக் கொடுக்கப்பெற்ற வெள்ளிச் சிங்காதனத்துக்குத் தங்க முலாம் கொடுத்தான்' இதனால் முலாம் வேலையில் சிறந்தவர்பலர் தஞ்சையில் இருந்தனர் என்பது தெரியவரும். பட்டுப்பூச்சி வளர்ப்பு இரண்டாம் சரபோஜி, காசி யாத்திரை மேற்கொண்டபொழுது, புரஸ்தாபாதுக்கு அருகில் உள்ள ஹளபீம்பூர் என்ற ஊரில் இருந்து 23-3-1821இல் எழுதுவித்த கடிதத்தில், பட்டுப்பூச்சி வளர்ப்புப் பற்றி விரிவாகக் காணப்படுகிறது. வங்காளத்திலிருந்து பட்டுப்பூச்சி அனுப்பப்பெற்றுள்ளது. அதில் மஞ்சள் நிறம், சிறிது மஞ்சள் நிறம், வெள்ளை நிறம் ஆகிய மூன்று வகைகள் உண்டு உயர்ந்த பட்டு ஆண்டுக்கொருமுறைதான் உற்பத்தியாகும். வெள்ளை திறப்புழுக்கள் தஞ்சையை அடையும்வரை பிழைத்திருந்தால் முட்டைகளை ஒரு பானையில் காகிதத்துடன் போட்டுப்பானையில் வாயை மூடிக் காற்றோட் டம் இல்லாத இடத்தில் உரியில் வைத்திருக்கவேண்டும். மாசி மாதத்தில் பானையிலுள்ள முட்டைகளில், காகிதத்தை எடுத்துக் காற்றோட்டமாக வைத்தால், புழுக்கள் உண்டாகும். அவற்றை மூங்கில் தட்டில் வைத்து இலங்தைக இலைகளைப் பொடியாக நறுக்கிப் போடவேண்டும். புழுக்கள் வளர்ந்ததும் முழு இலைகளைப் போடலாம். இந்தப்படி ஆண்டுக்கொருமுறை பட்டுப்பூச்சிகளை வளர்க்கவேண்டும். இந்த முறையிலேயே மற்ற நிறப்பட்டுப் பூச்சிகளையும் வளர்க்கலாம் - இங்ங்னம் பட்டுப்பூச்சி வளர்ப்புப்பற்றி எழுதப் பெற்றுள்ளது.* - 21. 4-219 21.அ. பட்டுப்பூச்சிகள் பெ ரும்பாலும் ஒவ்வோரினம் சிறப்பாக ஒரு மரத்தின் இலகளேயே உண்ணும். இவற்றில் முசுக்கடடை, ஆமணக்கு, இலந்தை, வாதா, சிந்து ரம், கருவாவி, நாரத்தை ஆகியவற்றைக் குறிப்பிடலாம் ' - பக்கம் 68 ; " காட்டில் இயற்கையாகக் கூடு சட்டி வாழும் புழுக்களைச் சேகரித்து வீடுகளில் வைத்துப் பராமரிப்பர் ; வீடுகளில் கூடு கட்டச் செய்வர். இவை இலந்தை மரத்தழையைக் தின்று வளரும் " - பக்கம் 85, பட்டுச்செல்வம், கே. எஸ். லக்ஷ்மணன், பாரி கேலயம், சென்&ன, 1962 - 22. 5-79 முதல் 82 முடிய