பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

397 1807இல் தஞ்சை அரசாட்சியில் 62048 மிராசுதார்கள் இருந்தனர் என்று தெரிகிறது. மிராசுதார்களும் பிறரும் சிறந்த வீடுகளில் வாழ்ந்திருத்தல் கூடும். 19ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஆறுகளைக் கடக்கப் பல பாலங்களைக் கட்டினர். மேலும் பல திருக்கோயில்கள் எடுப்பிக்கப்பெற்றன. இவற்றையெல்லாம் நிர்மாணிப்பதற்குரிய தொழிலாளிகளும் பலர் இருந்தனர். இத்தகைய அரண்மனைகளும், கோட்டைகளும், கோயில்களும் வெள்ளையர் மிராசுதார்கள் ஆகியோர் குடியிருக்கப் பங்களாக்களும் கட்டப் பெற்றமை யான் சுண்ணாம்பு வியாபாரம் மிகப் பெருகியிருந்திருத்தல் வேண்டும். கொல்லரும் தச்சரும் பல்கிப்பெருகிக் கட்டிடத்தொழிலில் ஈடுபட்டிருத்தல் கூடும் என்பது ஒருதஐல. சகரயாண்டு 1769 (1847) இல் சுண்ணாம்பு வியாபாரம் ச்ெய்யும் பத்துப்பேர் அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டமையை ஓர் ஆவணம் குறிப்பிடுகிறது.” ஒப்பந்தம் செய்துகொண்ட பதின்மர் பெயர் வருமாறு : வெங்கடாசலம் கொத்தனார் 6. ரங்கசாமிக் கொத்தனார் தாண்டவராய கொத்தனார் 7. முத்துக் கொத்தனார் மலையப்ப கொத்தனார் 8. பாவாடைக் கொத்தனார் 9 மருதை கொத்தனார் . குமாரசாமிக் கொத்தனார்

பழனி ஆண்டிக் கொத்தனார் 10. பார்வதி இறுதியில் கண்டவர் பெண்பாலர் ஆகலின் பெண்களும் இத்தகைய தொழிலில் கடுபட்டிருந்தனர் அல்லது பெண்கள் பெயரில் இத்தகைய வாணிபம் நடந்தது என்பது தெரியவருகிறது. -- இதனால் வீடுகள் கட்டுவதற்குரிய தொழிலாளர்களும் அவர்கட்குரிய பிற தொழில்முறைகளும் சிறந்திருந்தமை பெறப்படும். அந்நாட் கம்மியர் எடுப்பித்த வேலைத்திறன் பொருந்திய பெரிய கட்டிடங்கள் பலவும் ஏறத்தாழ இரு நூறாண்டுகட்குப்பிறகும் சிறிதளவே பழுதுபார்த்தலுக்கு உட்பட்டு இன்றும் சிறந்து விளங்குதலால் அன்னோர் கட்டடக்கலைத் திறன் நன்கு மதிக்கப்படுதற்குரியதாகும். கொத்தனார்க்குக் கூலி 1 பணம் என்றும், சித்தாளுக்குக் கூலி பணம் என்றும் ஒரு குறிப்பினால் அறியலாம்." இங்ங்னம் மிகக் குறைவான நாட் சம்பளம் பெற்றிருந்தபோதிலும் வெண்ணாற்றங்கரைப்பாலம் கட்டிமுடித்தபிறகு, தலைமைக் கொத்தனார்க்கு இாண்டு தங்கத் தோடாக்கள் முகப்புடன் பரிசு அளிக்கப்பெற்றன. அவர் 31. பக்கம் 400-தஞ்சைஜில்லா மானுவல் 32. 10-42 33, 2–12