பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 வண்டிக்காரர் சிலர் வண்டியுடையராய் வண்டியோட்டிப் பிழைத்தனர். சென்னையி லிருந்து தஞ்சைக்கு இரண்டு வண்டிகளுக்கு வாடகை ரூ. 44 என்றாற்போன்ற குறிப்புக்கள்" இதனை வலியுறுத்தும். தோட்டக்காரர், காவல்காரர் மராட்டிய மன்னர்கட்குத் தோட்டங்களும் தோப்புக்களும் நிறைய இருந்தன. அவற்றுக்கு உரியவர்கள் மராட்டிய அரசமாதேவியர்களேயாவ்ர். ஒவ்வொரு தோட்டத்துக்கும் ஒரு அலுவலர் இருந்தமையோடு காவல்காரரும் இருந்தனர். இங்ங்னம் காவல் தொழில் செய்பவர் மட்டுமன்றிப் பெரிய தோட் டங்களாக இருப்பின் நீர்ப்பாய்ச்சுதல் முதலியவற்றுக்குத் தற்காலிகமாகக் கூலியாட்களையும் அமர்த்தினர். ' பழத்தோட்டத்துக்குப் பங்குனி முதல் வைகாசி முடிய நீர் பாய்ச்ச 108 பேருக்கு ஒருவருக்கு பணம் வீதம் மூன்று மாதங்களுக்கு 5 சக்கரம் 4. பணம் " என்ற குறிப்பு இதனை வலியுறுத்தும். தோட்டப்பயிர் தோட்டங்களில் மரங்கள் நடச்செய்து வளர்த்தல் மிகவும் கவனமாகக் கருதப்பட்டுவந்ததாகத் தெரியவருகிறது. பதியன் நடவேண்டிய கன்றுக்கும் மரத்துக்கும் எருப்போடுவது எப்படி என்று கி. பி. 1806இல் சென்னை பள்ளிகொண்டான் மேஸ்திரி என்பவரிடம் இருந்து அறிவுரை பெறப்பட்டுள்ளது." இரண்டாம் சரபோஜி, காசியாத்திரை செய்தபொழுது, ஆங்காங்குச் சில மரம் செடி கொடிகளின் விதைகளைப் பெற்றுத் தஞ்சைக்கு அனுப்பி வைத்தார். 25-7-1821இல் " பிலக, வஹடேல்' (?) என்ற மரங்களின் விதை களையும்" 20-2-1821இல் 'மிளபிரா' என்னும் தானியத்தின் விதைய்ையும்" 5ட3-1921இல் "சிம்சுபர்' என்ற மரத்தின் விதையையும்" தஞ்சைக்கு அனுப்பினார். 1-2-1822இல் கருஞ் செங்கொட்டை மரத்தின் பழுத்த பழம் 19 டப்பாக்களில் வைத்தனுப்பி, அவ்விதைகளைத் தண்ணிர் தேங்காமல் இருக்கும் கருப்புக் களிமண் உள்ள மேடான நிலத்தில் விதைக்குமாறு ஆணை அனுப்பப்பெற்றது." 60. 4-238 61. 12-130 62. 1-189 63, 5–128 64, 5–197 65, 5–200 66, 5–26