பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

425 வேறொரு குறிப்பு விளம்புகிறது. இவ்வாவணத்தில் "காசியில் தருமவிசாரணை செய்யும் சடையப்பத் தம்பிரான் ' என்று கி. பி. 1828இல் இருந்த காசிமடத்து அதிபர் குறிக்கப்பட்டுள்ளார்." 1836இல் காசித்தம்பிரான் அதாவது காசிமடத்து அதிபர் தஞ்சைக்கு வந்து ஓரிரு நாட்கள் தங்கினராதல் வேண்டும். இது. '1836 மொஹரம் 23: தட்டி மகாலுக்குக் காசித்தம்பிரான் ஊரில் இருக்கும் வரை பஹிலி மகால் எருதுகளுக்கு வைக்கோல் கொடுத்தவகையில்' என்ற குறிப்பால்" அறியப்பெறும். புதிதாக 1836இல் பட்டம் எய்திய காசிவாசி கணபதி சுவாமிகள் இரண்டாழ் சிவாஜியைக் காண வந்தனர் போலும். இரண்டாம் சிவாஜி 1833இல் பட்டமெய்திய பிறகு பலருக்கும் நிலக் கொடை அளித்துள்ளார்கள். அவர்களுள் ஒருவர் திருப்பனந்தாள் சடையப்பத் தம்பிரான் என்பவர் ஆவர் என்பது ஒரு ஆவணச்செய்தியாகும்." இங்குக் கண்ட சடையப்பத் தம்பிரான் அடிக்குறிப்பு 6 இல் வரிசை எண் 9 இல் குறிப்பிடப்பெற்றவர் ஆகலாம். கைலாஸ்வாஸி' சைதம்பா பாயி அவர்கள் பெயரால் கி.பி. 1850இல் காசியில் ஒரு சிவன் கோயில் எடுப்பிக்கவும், பூசை நிவேதனத்துக்காகவும் காசித் தம்பிரான் அவர்களிடம் ரூ. 2500 கொடுக்கப்பெற்றதாகத் தெரிகிறது." இக்கோயில் காசியில் எங்கு எடுப்பிக்கப்பட்டது என்பதற்குச் சான்று இல்லை. 1850ஐ ஒட்டி இருந்தவர் பூரீ காசிவாசி சொக்கலிங்க சுவாமிகள் ஆவர். சைதம்பாபாயி என்பவர் இரண்டாம் சிவாஜியின் முதல் மனைவி ஆவர்.' கி. பி. 1851இல் மா. ஆவுசாகேப் அவர்கள்' காசியில் கேதார கட்டத்தில் உள்ள கேதாரிசுவரர் கோயிலில் விளக்குப் போடுவதற்காக 70 ஆயிரம் திரிகளை அனுப்பிவைத்தார். விளக்குக்கு எண்ணெய் வாங்கவும் விளக்கிடும் நாளில் அந்தணர்க்கு உணவளிக்கவும் ரூ. 125 காசித்தம்பிரான் அவர்கட்கு அனுப்பப்பெற்றது.' கி. பி. 1851இல் காசிமடத்து அதிபராயிருந்தவர்கள் பூநீகாசிவாசி சொக்கலிங்க சுவாமிகள் ஆவர். 7. 4-426 8. அடிக்குறிப்பு 6இல் நிரல் எண் 9 காண்க. 9. ச. ம. மோ. க. 12-82 10. ச. ம. மோ. க. 4-14 11. இறக்தவர்களுக்குக் ' கைலாஸ்வாஸி ' என்று அடை கொடுத்துக்கூறுவது மரபு 12. 4-888, 889; 4-868 : ச. ம. மோ. க. 9–84 13. In his youth Sivaji was married to three wives (daughter of his three sisters) of whom the eldest named Saidamba and the Youngest Padmamba died before him – P. 838, Tanjore Manual. 14. ஆவுசாகேப் என்பது இரண்டாம் சிவாஜியின் தாயார் அஹல்யாபாய் ஆவர். 15, 1–188–189 54