பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

435 -என்ற இந்தக் குறிப்பினால்" காஞ்சி காமாகூஜியம்மன் கும்பாபிஷேகம் முன்னரே நடந்ததாதல் தெரிகிறது." மேலே கண்ட பூநீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் சித்தி அடைந்ததும் ரீமகாதேவேந்திர சரஸ்வதி அவர்கட்குப்பட்டம் கட்டப்பட்டது." அப்பொழுது ஸர்க்காரிலிருந்து பாதகாணிக்கை வைக்கப்பெற்றது." அவர்கள் பட்டத்துக்கு வந்ததும் கார்த்திகை மாசம் 14ஆம் தேதி புதன்கிழமை ஊர்வலம் நடத்தப் பந்தோபஸ்து வேண்டுமென்று 24-11-1850இல் விண்ணப்பம் அனுப்பப்பெற்றது." ". சிறிது குழப்பம் ை மேற்கண்ட மகாதேவேந்திர சரஸ்வதி அவர்கள் பட்டத்துக்கு வந்த காலத்தில் சிறிது குழப்பம் இருந்தமை பற்றியும், இவர்க்கு முன்னவர் தாம் சித்தி அடைவதற்கு முன் அரசரிடம் சில செய்திகளைக் கூறவேண்டும் என்று விரும்பினார் என்றும், காரியப்பேர் எழுவர் அரசருக்குச் சுவாமிகள் நலமாக இருக்கிறார் என்று மட்டும் எழுதினர் என்றும், அவர் பின்னர்ச் சித்தி எய்தினார் என்றும், நீத்தார் கடமை செய்யவும் மற்றுள்ள கடன்கள் தீர்க்கவும் கருப்பூர் வாங்கவும் சேமிப்பு முழுவதும் செல்விட்டனர் என்றும், மாயூரம் நாராயண செட்டியிடம் ந ைக க ள் பாத்திரங்கள் முதலியவற்றை அடகு வைத்தனர் என்றும், ஒரு வேளைச் சோற்றுக்கே வருந்திய மடத்து மேலாளர் 30ஆயிரம் ரூபா வரவு செலவு செய்கிறார் என்றும், மிக்க செல்வந்தர் ஆகிவிட்டார் என்றும், வைத்தீசுவரன்கோயில் உலகநாதத்தம்பிரானிட்ம் ரூ.700 கடன் பெற்று, அத்தொகைக்குக் குடைகள் சாமரங்கள் முதலாகிய எடுபிடி களைக் கொடுத்துவிட்டார் என்றும், அவற்றை விலைக்கு வாங்கத் தம்பிரா னுக்கு உரிமையில்லை என்றும், தம்பிரானைத் தடுத்தபொழுது பழுதுபார்க்க எடுத்துச்செல்வதாகக் கூறினார் என்றும், மடத்து விஷயங்களை மேற்பார்வை செய்ய ஒரு குழுவை நியமிக்க வேண்டுமென்றும், அதில் பஞ்சதிராவிடர் களில் அ இருவர் இருக்கவேண்டும் என்றும், சிவாஜி மகாராஜாவுக்குச் சிலர் முறையிட்டுள்ளனர். முடிவு தெரியவில்லை. 56. 4-268 57. 22-1-1840இல் கும்பாபிஷேகம் நிறைவேறியது- காஞ்சி ரீபெரியவர்களின் பூரீபராபரகுரு ஸ்வாமிகள் விருத்தாந்தம்-பிருந்தாவனம் டிரஸ்டு, கும்பகோணம், 1981. Lásih 18(Sri Kamakoti Pitha, P. 441) 58. 4-888; 1-168; ச. ம. மோ. த. 2-7; 59. ச. ம. மோ. த. 80-48 60. 4-115 முதல் 117 வரை --- 60.அ. விந்தியத்துக்குத் தெற்கேயுள்ள திராவிடம் ஆக்திரம் கன்னடம் மகாராட்டிரம் கூர்ச்சரம் என்ற ஐந்தும் பஞ்சத்திராவிடம் எனப்பெறும் (Tamil Lexicon) 61. 4-74 முதல் 85 முடிய