பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458 இமாரதி மகால் அரண்மனையிலும் பிற இடங்களிலும் நடைபெறும் மராமத்து வேலையைக் கவனித்தலாகிய அலுவலுக்கு " இமாரதி” என்று பெயர் இமாரதி என்ற அலுவலர் பணி செய்யும் அலுவலகம் இமாரதி மகால் எனப் பெற்றது. மராமத்துக்கு வேண்டிய தளவாடங்கள் அவ்வலுவலகத்தில் இருக்கும். 1809: நவவித்யா கலாநிதி பள்ளிக்கூடம் அச்சு வேலைக்காக யந்திரத்தின் கட்டை உடைந்து போனதற்குப் போட 13 முழம் நீளம் ஒருசாண் அகலம் கருப்புக் கட்டையும், தச்சனும் இமாரதி மகாலிலிருந்து வரவேண்டும்" ட என்ற குறிப்பினால்: இமாரதி மகாலில் மராமத்துக்குரிய தளவாடங்களும், தச்சர் முதலிய தொழிலாளர்களும் இருத்தல் கூடும் என்பது தெரியவரும். வேறு சில மகால்கள் மேலே முதலில் குறிக்கப்பெற்ற 12 மகால்கள் மட்டுமன்றி வேறு சில மஹால்களின் பெயர்களும் தெரியவருகின்றன. சரஸ்வதி மஹால் என்பது யாவரும் அறிந்தது. இது சரஸ்வதி பாண்டாரம் என்றும் வழங்கப்பெற்றது. இதுபற்றிப் பிறிதொரு கட்டுரையில் காண்க.'அ நெட்டி மகால் என்பது மற்றொன்று. " கரும்பு கிளிகள் வகையறா அநேக மாதிரி சாமான்கள் தயாரிக்க நெட்டி மகாலுக்கு உத்தரவிடுகிறது" என்ற குறிப்பு: நெட்டியினால் பல பொருள்கள் தயாரிக்கும் பகுதி நெட்டிமகால் எனப்பெற்றதாதல் கூடும். சாயிதான் மகால் என்றொரு மகால் பேசப்படுகிறது. 1834: ரா. ஸ்வாமியார் நாளைக்கு இராமநவமிக்குக் கதை செய்ய வருகிறார்; நலி பங்க் வாசற்படிக்கு முன்னால், ஸர்க்கார் பங்க் அனுமாரின் எதிரில் கிழக்கில் உள்ள வாசற்படியின் வழியாய்ச் சாயிதான் மகாலுக்குப் போகும் வழியில் வழக்கப்படி வாகனத்தில் இருந்து இறங்குகிறது. பின்பு சாயிதான் மகாலின் தென்னண்டை வாசலின் வழியாய், அவரிடம் உள்ள இருவர், ஹாஜாருடன் மகால் போதேயின் வழியாய் இராமசுவாமி மகாலுக்குப் போகிறது" என்ற ஆணை" சாயிதான் மகால் என்ற ஒரு மகாலைக் குறிப்பதோடு, இராமசுவாமி மகால் என்று பிறிதொரு மகாலையும் குறிப்பிடுவதாக உள்ளது. 44. 1-233,284 44.அ. இந்நூல் கட்டுரை 17 காண்க 45. 1-282 46. 1–271