பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466 சர்க்காரிலிருந்து சீமைக்குத் தபால் அனுப்புவதாயின் கும்பினி தபால் காரர்களிடம் கொடுத்தல் வேண்டும்." " சிவகங்கையிலுள்ள தபால்காரனிடம் கொடுத்தனுப்பக்கூடாது; ஆகையால் கும்பினி தபாலில் போட்டேன் " என்றமையால் இரு வேறு விதமான தபால் முறைகள் இருந்தமை பெறப்படும். " பாங்கி தபால் ' என்று ஒன்று பேசப்படுகிறது. ' 4-10-1821 மருந்து சரக்குகளில் வைக்ராந்தம் காசி கேதாரகட்டம் குமாரசாமி மடத்தில் சேர்ப்பிக்கிறது என்ற விலாசம் எழுதிப் பாங்கி தபாலில் அனுப்புக II. என்றும்' ' 18-4-1821 விதைகளின் தினுசுசுள் ......... இவற்றைக்கட்டி முத்திரைபோட்டுக் கஞ்சம் வரையில் பாங்கி தபால் ரூ. 12 ' என்றும், வருவனவற்றால் பாங்கி தபால் என்ற ஒரு முறை இருந்தமை தெரிகிறது. இதனைக் கம்பெனியார் நடத்தினராதல் வேண்டும். கி. பி. 1849க்குரிய பின்வரும் குறிப்பு இந்நாள்போல் தபால் அனுப்பும் முறை ஏற்பட்டுவிட்டமை தெளிவாக்குகிறது: 1250 ( + 599 = 1849) ஹாஜுருடைய பெயருக்குச் சென்னையி லிருந்து கடிதம் வகையறா வந்ததற்குத் தபால் கட்டணம் கூலி செலவு : கடிதம் 1க்கு 4 அனா புத்தகம் 1க்கு 8 அனா : பாங்கித்தபாலில் புத்தகத்தைத் திருப்பியனுப்பியதற்கு 10 அனா". இதனால் இரண்டாம் சிவாஜி காலத்திலேயே தஞ்சையில் தபால் நிலையம் ஏற்பட்டு விட்டதாகத் தெரிகிறது. - " 1827: காசிக்கு அய்யாரப்பத் தம்பிரானுக்குக் கும்பினியின் தபாலில் கடிதம் அனுப்ப ரூ. 1" " 1829: கொழும்புக்கு யானையை வாங்கப்போனவர்க்குக் கும்பிளி தபாலில் கடிதம் அனுப்ப அணா 1 ' என்றமையால் வடக்கே காசிக்கும் தென்கிழக்கே இலங்கைக்கும் கூடத் தபால் அனுப்ப வசதிகள் ஏற்படுத்தப்பெற்றுவிட்டன என்றறியப்பெறும். _ 21, 3-200 22. 5-505 23. பரங்கி தபால் ' போலும் 24. 5-117 25, 4-388 26, 4-21s 27. 4-23s