பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 மிட்டதாக மேலிடத்துக்கு எழுதினார். இதுபற்றிய மோடி ஆவணத் தமிழாக்கம்: வேண்டிய பகுதி மட்டும் இங்கே தரப்படுகிறது: " மக்லோட் ஆனவர் ஒரு உடன்படிக்கை-கும்பினியின் தொகைக்காகப் பாபநாசம், மன்னார்குடி, மாயவரம்......விட்டுவிடுகிறது. மூன்று வருஷத்துக்கு ஒரு முறை கணக்குத் தீர்ப்பது. கும்பகோணம் க்யா பட்டுக்கோட்டை வரிகள் வகையறாக்களை விபr:ஆனவர் வைத்துக்கொண்டு காலம் கழிக்கிறது. அதிலிருந்து வருஷத்துக்கு 60,000 வராகன் கடனுக்குச் செலுத்துகிறது." இந்தப்படி சம்மதித்தால் கையொப்பம் போட்டுக்கொடுங்கள்; இல்லாவிட்டால் சிவராயரிடத்தில் ஒப்புவித்து டுங்கள் என்று எழுதி அனுப்பினார். உடனே சாயங்காலம் 4, 5 தடவை சொல்லியனுப்பி இராத்திரி 9 மணிக்கு மிஸ்டர் மாக்லோட் கோட்டையின் வாசலை மூடி, ரிஜிமெண்ட் மிஸ்தர் ராமன் வீட்டுச் சமீபம் கொண்டுவந்து வைத்துப் பட்டாளம் முழு மையும் திட்டிவாசலுக்கு அருகில் கொண்டுவந்து வைத்து...... "சமாதானமாகக் கையொப்பம் இட்டுக் கொடுத்தால் நலம்; இல்லா விட்டால் கும்பினியின் விரோதம் உண்டாகும்" என்று சொன்னார். பிறகு விபr ஜப்தி செய்யப்பட்ட 3 சுபைகளின் கடுதாசியில் கையெழுத்து இட்டுக் கொடுத்தார்..... Ti இங்ஙனம் அச்சுறுத்தித் தன் சுயநிலை இழந்த பிறகு கையெழுத்துப் பெறப் பட்ட போதிலும் மக்லோட் அமர்சிங்கு சுயவுணர்வுடன் மகிழ்ச்சியோடு கையொப்பம் இட்டார் என்று எழுதிய அரசியல் சூழ்ச்சி கருதத்தக்கது.* சரபோஜியைச் சுவீகாரம் எடுத்துக்கொண்டது செல்லாதென ஒரு நாடகம் நடிப்பித்து அமர்சிங்கை அரசராக்கினர் கும்பினியார். அமர்சிங்கிடம் இரண்டு உடன்படிக்கைகள் செய்துகொண்டும் தஞ்சைத் தரணி முழுவதும் தம் ஆளுகைக்குக் கீழ்க் கொணர முடியவில்லை. ஆகவே இந்நாடகத்தில் மேலும் ஒரு காட்சி நடிக்கப்பெற்றது. 1796 மார்ச்சுத் திங்களில் லாட் ஹோபர்ட் சரபோஜியின் உரிமையைப் பற்றி முன்னர்க் கருத்துக் கூறிய பண்டிதர்களையே அழைத்து விசாரிக்குமாறு மக்லோடுக்கு ஆணை பிறப்பித்தார். அப்பொழுது கவர்னர் ஜெனரலாக இருந்தவர் லார்ட் கார்ன்வாலிஸ் என்பவர் ஆவர். 20. - Pages 101–102, K. Rajayyan, எதிரி - அமர் சிங் 21, 7.598 முதல் 599 வரை; 8 - பக்கம் 7 முதல் 10 முடிய 22. (The treaty of 1793) required the Rajah to pay 60,000 star Pagodas towards the clearance of his debt instead of 80,000, P. 96. K. Rajayyan. 23 The Madras Council...... reported to Bengal Council that the Rajah signed the treaty not only with willingness but also with pleasure - P.102. K. Rajayyan,