பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 stration) என்பார் தலைமையில் இருந்த ஆட்சிக் குழுவினர், கர்னல்ஜேம்ஸ் ஸ்டுவர்ட் ( Colonel James Stuart) என்பவரைத் தஞ்சையில் ரெஸிடெண்டு (Resident) ஆக நியமிக்கத் தீர்மானித்தனர். லார்டு பிகட் இதனை மறுத்தமை யோடு எதிரிகளாகச் செயல்பட்ட ஸ்ட்ராட்டன் முதலியவர்களைத் தற்காலிக மாக நீக்க ஒரு தீர்மானம் கொணர்ந்தார். இது நிறைவேற்றப்பட்டது. அதனால் அப்பகைஞர் ஒன்று சேர்ந்து லார்டு பிகட்டைச் சிறைப்படுத்தினர்." ஸ்ட்ராட்டனும் 23-8-1776இல் கவர்னர் ஆனார்." ரெஸிடெண்டு ஆக நியமனம் பெற்றவர் தஞ்சைக்கு வந்ததாகத் தெரியவில்லை. 2. மக்லோட் (Macleod, Alexander). இவரே முதல் ரெஸிடெண்டு ஆதல் கூடும் எனத் தோன்றுகிறது. இவர் துளஜா ஆட்சியின் இறுதிக் காலத்தில் தஞ்சைக்கு வந்திருக்கலாம். கி. பி. 1787, ஜனவரி 22ஆம் நாள் துளஜா சரபோஜியைச் " சுவீகாரம்" எடுத்துக்கொண்டார்”. ஆனல் "1786 துளஜா ராஜா சாஹேப் அவர்கள் புத்திர ஸ்வீகாரம் செய்தமைக்காக 286 சக்கரம்" என்றொரு குறிப்பில் 1786 என்றுள்ளது. (மூலச்சுவடியில் ஸாஹர்சன்' ஆண்டு கொடுத்திருக்கக்கூடும். அதனை ஆங்கில ஆண்டு ஆக்குங்கால் இத்தகைய வேறுபாடு வருதல்கூடும்). அச்சமயத்தில் கவர்னர் ஆக இருந்தவர் ஆர்ச்சிபால்டு காம்பெல் ஆவர். அவர் அரசர் இறந்ததும் யாரையும் அரசராக ஒப்புதல் அளிக்கக்கூடாதென்று ரெஸிடெண்டு மக்லோடுக்கு ஆணை பிறப்பித்தார் என்று தெரிகிறது". அமர்சிங்கின் ஆட்சியில் ஸர்கேல் ஆக இருந்தவர் சிவராயர் ஆவர். அவர் தன்னலம் பொருந்தியவர். அமர்சிங் கொடுக்க வேண்டிய த்ொகை களைக் கொடுக்காமற் போனால், மன்னார்குடி, திருவையாறு, மாயவரம், பட்டுக்கோட்டை ஆகிய சுபாக்களினின்று வசூல் செய்து கொள்ளலாம் என்று 1787இல் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பெற்றது. இங்ங்ணம் அடைமானம் Golijul Qupp &L rāāsoari, ( the mortgaged districts ) hit வசப்படுத்திக் கொள்ள ஆங்கிலேயர் முனைந்தனர். ஆகவே சிவராவை ஸர்கேலாக நியமித்தது முதலிய செயல்களைப்பற்றி ஆங்கிலேயர்கள் அமர்சிங்கைக் குறை கூறினர். அமர்சிங்கு ராயரை விட்டுக் கொடுப்பதாக இல்லை. இதுபற்றிக் கேட்டறிவதற்காக மக்லோட் ஒருநாள் இரவில் அமர்சிங்கைப் பார்த்து வந்தார். 23. Pages 78–79, History of British Diplomacy in Tanjore - K. Rajayyan, 24 List of Governors of Madras, S. No. 35, History of Tamil Nad, N. Subramanian. 25. P. 83, History of British Diplomacy in Tanjore, K. Rajayyan 26. ச. ம. மோ. த. 17-86 27. P. 89, A History of British Diplomacy in Tanjore, K. Rajayyan 28. P. 95, A History of British Diplomacy in Tanjore,