பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 இவர் சிறந்த கல்விமான். இவர் சரஸ்வதி மகாலிலிருந்து பலநூறு சிறந்த நூல்களை எடுத்துச் சென்று படித்திருக்கிறார்". - இவரைப்பற்றி 1849 வரையிலும் தெரியவருகிறது. இவர் தமக்குத் திருவையாற்றிலிருந்த தோட்டமும் நிலமும், வெண்ணாற்றங்கரைப் படித்துறை பங்களாவும் 1847 இல் விற்பனை செய்துள்ளார்". இவருடைய தந்தை 1849இலும் உயிர் வாழ்ந்திருந்தார் என்றும், அவருக்கு ரூ.4 லக்ஷம் மதிப்புள்ள சொத்து இருந்தது என்றும் இவர் எழுதிய ஒரு கடிதத்தால் அறியப்பெறும் அ. o o இவருக்குப் புதுச்சத்திரத்தில் ஒரு பங்களாவும்" தஞ்சை மேலவீதியில் ஒரு விடும்” இருந்தனவாதல் வேண்டும். தெற்குவீதியில் இருந்த இவரது வீடு 1849இல் 'மங்களவாச சத்மத்தின் சாலாவின் மொயின் தொகை"யினின்று ரூ.50, 000க்கு வாங்கப்பட்டது". --- - சர்க்கேல் வேலையில் இருந்தவர்கள் அ. சர்க்கேல் பாபா : அமர்சிங்கர் காலத்தில் சிவராவ் சர்வாதிகாரியாய் இருந்தபோதிலும்,'பாபா'என்பவர் சர்க்கேலாகவும் இருந்துள்ளார். அப்பொழுது தான்.3 சுபாக்களை மக்லோட் ஜப்தி செய்தார். அதனால் ஸர்க்கேல் பாபாவை "வீட்டிலிரும்' என்று சிவராவ் கூற, அமர்சிங்கர் if sp if ஆகட்டும்' என்று கூறினராம். சிவராயர் கை மேலோங்கியே இருந்தமையின் 'பாபாவும் காலத்தை அநுசரித்துச் சிவராயர் மனதுப்படி நடந்தார்". பாபா கூறியது போல் எதுவும் நடக்கவில்லை. ஆகவே "என்னையும் தெருவுக்கு இழுத்துக் கெடுத்து விட்டார்களே என்று விசனப்பட்டார்". ----- ஆ. சர்க்கேல் ராமோஜி ஸ்ர் ஜேராவ் காட்கேடஇவர் இரண்டாம் சரபோஜி காலத்தில் இருந்தவர். - - * இவருடைய தகப்பனார் தளகேசுவரசுவாமியை எழுந்தருள்வித்து லசஷ்மி ராஜபுரம் அக்கிரகாரமும் அன்னசத்தி மும் தன் ஊதியத்தில் நடத்தி வந்தார். அவர் இறந்துபட்டதால் அவர் ஏற்படுத்திய தருமங்களை ஸ்ர்க்கார் நடத்த வேண்டும் என்று கி. பி. 1813 இல் கேட்டுக்கொண்டார். ஆகவே இவர் கி. பி. 1818இல் சர்க்கேல் ஆகியிருக்கக்கூடும் என்று ஊகிக்கலாம்."அ -*** --- 86. ச. ம. மோ த 2-39 87. 4-337, 888 87 s. 5-264,265. 38. 5–233 89. 6-140 90. 1-142 91. 7-591 முதல் 595 : 3-2 முதல் 5, 10, 16 91.அ. 4-479, 480