பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 சரபோஜி பெற்றார். எஞ்சிய பகுதி 5 பகுதிகள் ஆக்கப்பட்டன. 3 பகுதிகள் தண்டைத்தேவர் பெற்றார். எஞ்சிய இரண்டு பகுதிகள் அவருக்கு உதவி புரிந்த சசிவர்ணத் தேவர் பெற்றார். அவரே சிவகங்கைச் சீமைக்கு உரியவர் ஆனார். ஆனால் இங்ங்னம் வென்ற பகுதிகள் எல்லாவற்றையும் சரபோஜி யின் தம்பி துக்கோஜி இழந்தார். ஆகவே அவர் மகன் பிரதாபசிங்கர் தம் சேனைத் தலைவர் மானோஜியை ஏவி அறந்தாங்கிக் கோட்டையை வென்று கொண்டார். - சேதுபதிகளோடு இருந்த பகைமை துளஜாஜி II காலத்திலும் நீடித்தது. மானோஜி 1755இல் வென்றுகொண்ட அறந்தாங்கிக் கோட்டையையும் பிற பகுதிகளையும் சேதுபதி கி. பி. 1763இல் மீட்டுக் கொண்டார். தஞ்சையரசர் இராமநாதபுரத்தின் மேல் படையெடுக்க முயன்றபொழுது முகம்மது அலி தடுத்தார். பின்னர் 1771இல் துளஜா ராமநாதபுரத்தின் மேல் படையெடுத்தார். ஒவ்வொரு கோட்டையாகப் பிடித்துக்கொண்டு சென்று இராமநாதபுரக் கோட்டையை முற்றுகையிட்டார். ராமநாதபுரத்து அரசியார் சமாதானம் செய்து கொண்டார். துளஜா வென்று கொண்ட பகுதிகள் யாவும் அவர் வசமே ஆயின. மேலும் ஒரு லக்ஷம் ருபாயும் சில அணிகலன்களும் இரண்டு பீரங்கிகளும் கொடுக்கப் பெற்றார்". இதுகாறும் கூறப்பெற்றவையெல்லாம் மோடி ஆவணத் தமிழாக்கத் தினின்று அறிவதற்கில்லை. எனினும் இரண்டாம் துளஜா இராமநாதபுரத்தின் மேல் 1771இல் படையெடுத்துவென்ற செய்தி பின்வருமாறு ஒரு ஆவணத்தில் காணப்பெறுகிறது: ரீதுளசா மகாராஜா சாயேப் அவர்கள் பட்டத்திலே ராமநாதபுரத்தின் பேரில் சண்டைக்குப் போறது. என் தகப்பனார் சாமிசிறாங்கும் 33 சனமும் வீரலட்சுமி விஜயலட்சுமி என்கிற பீரங்கியை இழுத்துக்கொண்டு போய்ச். சண்டைக்குப் போனோம் மறுபடி தஞ்சை நகரம் வந்து சேர்ந்தார்கள்' என்னும் இப்பகுதி இரண்டாம் சிவாஜிக்கு வலம்புரியிலிருக்கும் சாமி சிராங்கு மகன் ராமசாமி சாமிநாயக்கன் ஆனந்த வருவடிம் ஆனி மாசம் 29ஆம் நாள் (11-7-1854இல்)'க எழுதிய கடிதத்தில் கண்ட சில வரிகளாகும். இக்கடிதம் இராமநாதபுரத்தின்மேல் இரண்டாம் துளஜா படையெடுத்த காலத்துக்கு 80 ஆண்டுகட்குப் பின்னர் எழுதப்பெற்றது. ஆகவே செவிவழியாக அறிந்த செய்திகள் இக்கடிதத்தில் குறிப்பிடப் பெற்றன எனலாம். 3. Maratha Rule in the Carnatic– C. K. Srinivasan, P. 232,235. 4. Maratha Rule in the Carnatic - P. 295-297 4-y. Page III; The Iridian Ephemeris, 1800 to 2000, L. D. Swami Kannu piliai 5, 6–278, 279 (1915). T2