பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

103



வந்த பிற்பாடு வந்தான். அப்போ ஹாஜா அந்த சயிதொடே rண நேரம் உபசாரமாய் பேசிக் கொண்டிருந்து செல பாதைக்கு போயி வாறோமென்கிற வியாச்சியத்தினாலே தாம் அப்பாலே யிருக்கப்பட்ட மாலுக்குப் போய்விட்டார். அப்போ மஹாறாஜாவுடைய முன் சயிகை பண்ணிவைத்திருந்தபடிக்கு அந்த மூணு சற்தார்களும் சயிது கிட்ட ஒரு மனுஷனாகிலும் இருக்காமல்ப் படிக்கு முன்னமே தானே பந்தோபஸ்த்து பண்ணிவைத்த படியினாலே சில்லறை மனுஷரை* சயிது கிட்ட அனுப்பிவித்து அவனை அசைய வொட்டாமல் கையைக் காலைக் கட்டி இப்பால் இடத்தில் கொண்டு வந்து அவனை பரலோகத்துக் கனுப்பிவிச்சார்கள்". உடனே அவன் வீட்டு மேலேயும் போய் விழுந்து' ஒடிப் போனாவாள் போக, குறைப் பேரை சத்துரு செல்லிய மில்லாமல் பண்ணிப் போட்டார்கள். அப்பால் மஹாறாஜா அவர்கள் அன்னப்பா சேட்டிகைக்கு சரிக்கிலும் சேனாபதி தினமும், மல்லாற்சி காடேராவுக்கு கில்லேதாறும், டபீர் நாரோ பண்டிதருக்கு சிட்டினிசும் இந்தப்படிக்கு அதிகாரம் கொடுத்து ஹாஜ்யபாரம் சுபrயாக பண்ணிக்கொண்டு வந்தார்கள்.

அப்பால் மஹாராஜா அவர்கள் பூரீறாமேசுவர யாத்தின்ரக்கு சகல சன்னாகத்துடனே போய் யாத்திரை பண்ணி வெகுசாய் தான தற்ம்மமும் பண்ணி மறுபடி அவ்விடம் விட்டு திரும்பி வருகிறவேளையிலே றாமனாத புரத்து மறவர் ஜமீன்தார் பரம்பரையாய் மஹாராஜாவால் தன் றாச்சியம் நிலைத்து இருக்குதென்று தெறிஞ்சிருக்கிற படியினாலே காதவழி முன்னுதாக வந்து தன் கோட்டைக்கு வந்து பார்த்து ஒரு நாள் இருந்து போக வேணு மென்று பிறார்த்தினை பண்ணினபடியினாலே மஹா றாஜாவும் அங்கீகாரம் பண்ணிப்போனார். அப்போ வாசல்படிக்குள்ளே இருந்த செனங்கள் தெரியா

24. சில்லறை மனுஷரை - சில வேலையாட்களை (போ.வ.ச.பக். 90)

25. “Pratap when he became king was not prepared to tolerate the usurped authority of the Killedar and therefore at an opportune moment, he removed this enemy in his path of advancement by executing him” (Srinivasan, Pages 250-51). “He was murdered and buried on the northern bank of Vadavar where a large mantapam still marks the spot of his interment and is called Syed Ghori" - (Hicky, Page 86)

விரிவாகச் சையிதுபற்றிக்கூாமல்,

'பிறகு இராஜா தன் சர்க்கிலான சையிது என்கிறவன் அந்தக் கலாபத்துக்கு ஒத்தாசை செய்தவன் என்று அபிப்பிருயமாகிய உடனே அவனத்தள்ளி அண்ணப்பா சேட்ருவு யென்பவரைச் சர்க்கிலாகவும் ...... நியமித்துக்கொண்டு - என்று திருமுடி சேதுராமன் சுவடியில் ஒரே ஒரு வாக்கியத்தில் சையிது செய்தி கூறப்பட்டுள்ளது (பக். 319)

26. போய் விழுந்து - அல்லாப்பண்ணி (டி3119) 27. சிட்டினிசு - காரியதரிசி வேலையும் (போ. வ. ச. பக். 90)

“The celebrated Dabir Pandit an expert in revenue matters was another of the great men in his Court” - (Subramanian, Page 48)

28. சுபகடியாக பண்ணிக்கொண்டு - செவ்வனே நடத்தி (போ. வ. ச. பக். 90)