பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

109

 துறையில் இங்கிலீசுக்காறருடைய ஒரு கப்பல் முழுகிப் போய் அதில் சிறுது சாமான்களும் னாய்களும் மஹா ஹாஜா வைத்துக் கொண்டபடியினாலே அந்த தீவு கோட்டை தங்களுக்கு தேவையென்கிற அபேட்சையாகப் பிடித்துக் கொண்டார்கள். அப்போ மகா ஹாஜா சேனாபதி மானோஜி றாவை' கொஞ் சஞ் சேனையுடனே அனுப்பிவித்து அந்த தீவுகோட்டையை சண்டைபோட்டு வாங்கிக் கொண்டு அந்தக் கோட்டையில் ராஜாவின் உத்தாரப்படிக்கு ஜாபற் சாயபு யென்கிறவனை கில்லேதாரனாக வைத்துப்போட்டு மானோஜிறாவு தஞ்சாவூர் கோட்டைக்கு வந்துவிட்டார். ரெண்டாம் விசை இங்கிலிசுக்காற ருடைய சேனைகள் தீவு கோட்டை பேரிலே வந்தார்கள்". அப்போ கொஞ் சம் சற்தார்களையும் சேனைகளையும் அனுப்பிவித்தார். அந்த சண் டையில் இங்கிலீசுகாறருடைய கால்த்தளங்கள் கொள்ளடக்கரையிலே நிண்ணு கொண்டு 'யிருந்தார்கள். தஞ்சாவூர் சேனை அதின் பேரிலே போறத் துக்கு கொள்ளிடக் கரை உன்னிதமான படியினாலே பின்னொரு யிடத்திலே யிருந்து ஆத்தைக்கடந்து போறத்துக்கு குதிரை சவவார்களுக்கு வழியில்லாமல்ப் படிக்கு சத்தே அப்பாலே போய் வழியோடே யிறங்கி ஒருவழியாக ஆற்றிலே வருகிறத்துக்கு யேதுவாக யிருந்த படியினாலே அப்படியே வருகிறபோது யிங்கிலிசுக்காரருடைய சேனை கரையி லிருந்தவர்கள் அடிக்கவும் சுடவும் தலைப்பட்டார்கள். இவாளுக்கு ஆற்று மணலினாலே குதிரைகளை வேகம் பண்ணி தங்களுக்கு வேணுமென்கிற படியே திருப்பிக் கொள்ளக் கூடாமல்ப் போனபடியினாலேயும், கொஞ்சம் சேனைகள் சேதமாகி ஒரு சற்தார் விரப்பா யென்கிறவனும் விழுந்து போனான். அப்பால் இங்கிலிசுக்காறர் மஹா ருஜா வுக்கு சமாதானம் பேசி உடன்படிக்கையும் எழுதிக்கொடுத்தார்கள் அதின்

=

s4. “The desire to acquire some territory was the supreme cause for this war"- (Srinivasan, Page 262)

பிடித்துக் கொண்டார்கள் என்று இங்கு இருப்பினும், முதல் தடவை ஆங்கிலேயர் தோற்றனர் என்பது வரலாற்றாசிரியர் கூற்றாகும்:

“Thus the engagement of the English with a native prince proved a signal failure and they had to return to Fort St. David” (Srinivasan, Page 263)

“on the 11th of May (1949) Captain Cope with his army retreated in consternation to Fort St. David” (Rajayyan, Page 28)

85. மானோஜிராவ் - நாகாஜிராயர் (போ. வ. ச. பக். 9:6)

86. “The Second expedition was undertaken not with the idea of restoring Kattu Raja to the Tanjore throne, but with the sole purpose of capturing

ಶ್ಗta in order to wipe off the stigma of defeat”- (Srinivasan, Page 263-64)

87. “According to the treaty Pratap agreed to grant to the English, the fort of Devikottai and some amount towards the expenses of war and to pay to Kattu Raja a pension of Rs. 40,000” - (Srinivasan, Page 264)

“Pratap Singh granted a life pension of Rs. 4000 a year (G. B. Malle

san, History of the French in India, Page 244)- (Rajayyan, Page 29, F. n. 20)

தேவிக்கோட்டைக்காக ஆங்கிலேயர் ஆண்டொன்றுக்கு 1100 வராகன் தஞ்சை மன்னருக்குக் கொடுக்கலாயினர் (கே. எம். வே. பக்கம் 38-39)