பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

தஞ்சை மராட்டிய



ஒண்ணாய் சேர்ந்து திருச்சினாப்பள்ளி மேலே உயித்தத்துக்கு போக தயாறா னார்கள்.

அப்போ திருச்சினாப்பள்ளியி லிருந்த மமுதலிகான் தமக்கு றொம்பவும் ஆப்த்தமா யிருக்கப்பட்ட தஞ்சாவூர் மஹா ஹாஜாவுக்கு சொல்லியனுப்பிவித்த நாழிகைக்கு மஹா ஹாஜா அவர்கள் தம்முடைய சேனைகள் அய்யாயிரம் குதிரை சவார்" பதினைய்யாயிரம் கால்தளம் பெரிய பீறங்கிகள் றஸத்து முதலானதும்" கொடுத்து சற்தார் மானாஜி றாவையும் கும்மக்காக அனுப்பி வித்தார். அந்தப்படியே விசைய றகுநாதறாய தொண்டமான் கொஞ்சம் சேனைகள் கொடுத்து அனுப்பிவித்து கடைசிவரைக்கும் றஸ்த்துக்கும் கும்மக்குப் பண்ணினான். இப்படியே றாமநாதபுரம் மறவர் உடையா தேவர் என்கிற பாளையக்காறர்களும் கொஞ்சம் கும்மக்கு அனுப்பிவித்தார்கள். இது தவிர." பூரிறங்கப்பட்டணம் நந்திறrஜாவுடைய தளவாய்க்கு மமுதலிகான் சயிது மகத் தும் சறதார் கிட்டயிருந்து சொல்லி யனுப்பிவித்தபடியினாலே" தம்முடைய சறதார் கத்தி கோபால ஹாஜாவை திருச்சினாப்பள்ளி கோட்டைக்கு அனுப்பி வித்து நவாபு மமுதல்லிகானுக்கு சிலவுக்கு கொஞ்சம் திரவியமுங் கொடுத்து அனுப்பி தாமும் பாரி சேனைகளுடனே மமுதல்லிகானுக்கு கும்மக்காக வந் தார். அப்படியே முறாஜிகோற்படேயும் நவாபுக்கு கும்மக்காக வந்தான்.

இப்படி மமுதல்லிகானுக்கு கும்மக்காக வந்ததுகளை சந்தாசாயபு நிதா னித்துக் கொண்டு உயித்தத்துக்கு ஆயித்தமாய் ஆலம்பு கான் என்கிறவன். முன்னாலே தஞ்சாவூரிலே சேவுக மிருந்தவன், அப்பிறம் மதுரை சீமையை செயித்துக்கொண்டு சந்தாசாயபுக்கு கும்மக்காக வந்தவன், தன் சேனைகளுடன் மத்த சேனைகளையும் கூட்டிக்கொண்டு, தஞ்சாவூர் சற்தார் மானாஜிறாவுடன் சண்டைக்கு வந்தான். அப்போ மானாஜிறாவும் தன்னுடைய சேனைகளையும் முஸ்த்திப்பு பண்ணிக்கொண்டு உயித்த முகமாயி ஒண்னுக்கொண்னு கைகலந்து பீரங்கி துபாக்கி குண்டுகளால் சண்டை யாகிக்கொண் டிருக்கச்சே இங்கிலிஸ் காறருடைய சற்தார் மேஜர் உத்தியோகஸ்தர், கொஞ்சம் சேனையுடனே திருச்சினாப்பள்ளி கோட்டைக்கு போறவர், வழியிலே மானாஜிறாவு சண்ட்ை போட்டுக்கொண் டிருக்கிறத்தைப் பார்த்து மானாஜி றாவண்டையில் வந்து சண்டையின் காரணத்தை விசாரித்தார். அந்த பூர்வோத்திரம் விஸ்த்தார

H

159. சேனைகள் அய்யாயிரம் குதிரை சவார் - சேனையிலிருந்து 1000 குதிரைப் படைகளையும் (போ. வ. ச. பக். 103)

160. றஸ்த்து முதலானதும் - சேனைக்கு வேண்டிய உணவுப்பொருள்களையும் (போ. வ. ச. பக். 103)

161. “Pratap Singh sent to Trichinopoly 3000 horse and 2000 foot under general Manoji to help Muhammad Ali" (Srinivasan, Page 265)

162 முதல் 153 வரை போ. வ. ச. வில் பிற்கண்டவாறு தெளிவாக வுள்ளது:

'நவாப் மகம்மது அலிகான் சொல்லியனுப்பியதற் கிணங்கி ரீரங்கப் பட்டணத்துப் பெரிய சேனையுடன் நந்தராஜ் தளவாய் என்பவர், சைதம் கது என்கிற சர்தாருடன் கிளம்பி'.