பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

133

 I33

அப்பால் மஹாறாஜா அவர்கள் சூரியவம்சமா யெசவந்தறாவு’ யென்கிற வனை சென்னைப் பட்டணத்திலே நவாப்பு அண்டைக்கனுப்பிவித்து சிறுது சந்தி வாற்தைகளை சொல்லச் சொன்னார். அதுக்கு நவாப்புடைய மனோ பாவம் வேறே யிருந்த படியால் அந்த சற்தாருடனே கூட ஒரு காண்டா முறுகமும் வஸ்த்திர பத்திரமும்' அனுப்பிவித்தாரே அல்லாமல் சந்தி சமா தான வாற்தையே கேழ்க்க யில்லை. அப்பால் நவாப்பு பாக்கி றுபாயெல்லாம் சாடாவாய் செண்ண பிற்பாடு துளஜி மஹா ஹாஜாவுக்கு சேனைகளுக்கு சம்பளங் கொடுக்க அட்டிவிழுந்த* சமையத்திலே நவாபு அவருடைய சனத்துக்கெல்லாம் போதினை பண்ணி" சிறுது சற்தார்களை சேர்த்துக்கொண்டு ஹாட்சியத்தை ஆக்கிறமித்துக்கொள்ள வேணுமென்று (ஏற்பாடு செய்தார்.) அப்போ வடக்கே யிருந்து மாதவறாவ் சதாசிவ் யென்கிறவன் சென்னப்பட்டணத்துக்கு நவாப்புக் கிட்ட னாலத்தொண்ணு' வாங்கிற நிமித்தியம் வந்தவனையுங் கையுங் கீழே போட்டுக் கொண்டு' தம்முடைய ரெண்டாவது பிள்ளை மதாறமுலுக்கு" யென்கிறவனுக்கு சேனையுங் கொடுத்து தஞ்சாவூர் மேல் யாதொரு முகாந்திர மில்லாம லனுப்பிவித்தார். அவாள் தஞ்சாவூருக்கு வந்து சேர்ந்து சிறுது சண்டை சிறுது கிறத்திறமத்தினாலே தஞ்சாவூர் கோட்டையும் றாட்சிய மும் ஆக்கிறமித்துக்கொண்டு கோட்டையிலே தம்முடைய சேனைகளையும் வைத்து மஹா ஹாஜாவுடைய பழைய சேவுகம் டபீர் னாரோ பண்டிதருக்கு றாட்சியத்தின் விசாரணை அதிகாரமும்" கொடுத்துப்போட்டு தாம் சிறுது னாள் கும்பகோணத்திலே யிருந்து அப்பால் சென்னப்பட்டனத்து நவாப்புக்

utmost importance to the Wallajah interests, the Nawab directed his son Umdut ul Umara who settled the terms, to obtain possession of it. A fresh negotiation ensured and Umdat ul Umara forced the helpless Rajah to restore

not only Vellum, but also Koilady and Elangad to the Nawab’’- (Rajayyan, Page 62) ==

23. சூரியவம்சமா யெசவந்தறாவு - சர்தார் சதாசிவராவ் சூரியவம்சீ (போ. வ. ச. பக். 120)

24. காண்டாமிறுகமும் வஸ்திர பத்திரமும் - ஒரு குதிரையும் வஸ்திரமும் கடிதமும் (போ. வ. ச. பக். 120)

25. அட்டி விழுந்த - பணமுடை யேற்பட்ட (போ. வ. ச. பக். 120)

26. அவருடைய சனத்துக்கெல்லாம் போதினை பண்ணி - மகா ராஜாவின் சேனையிலுள்ளவர் களுக்கு லஞ்சம் கொடுத்து (போ. வ. ச. பக். 120)

27. நாலத்தொண்னு - செளத் (போ. வ. ச. பக். 120) 28. கையும் கீழேபோட்டுக்கொண்டு - தன் ஸ்வாதீனப் படுத்திக்கொண்டு (போ. வ. ச. பக். 180)

29. “Muhammad Ali appointed his second son Amir ul Umara, a young lord of intrigue and enterprise as his deputy for southern Carnatic”- (Rajayyan, Page 68)

இதில் அமீர்உல்உமரா என்று கூறியிருக்க மெக்கன்சி சுவடியிலும், போ. வ. ச. விலும் (பக். 120) மதார்முலுக் என்றுளது.

30. “The Nawab spent enormous amounts reconstructing the fort of Tanjore and garrisoned it with his own troops ... He appointed Dubeer, the

醬 ster of Tuljaji at the head of revenue administration’’- (Rajayyan,

age 69)