பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மன்னர் வரலாறு

135


லாக உளுக்கார்ந்தான்.[1] அதில் அவருக்கு கோபம் வந்த சேதி தெரிந்து, அவர் கிட்ட ஒருதன். அந்த கோனேரிறாயருக்கு அவமரியாதையாக பேசினான். அதினாலே இருவருக்கும் சற்ச்சையாய் கத்தி யுருவிக்கொண்டு ஒண்னுக்கொண்ணு அடித்துக்கொள்ளுகிற சமையத்தி லஞ்சாறு பேராய் சேர்ந்து கொண்டு கோனேரி றாயர் பேரிலே கைமிஞ்சி நடப்பிவித்தபடியினாலே[2] விசேஷிச்சு காயம்பட்டு பிறாமணன் கீழே விழுந்தான். அந்த வேளையில் இருந்த அவசறத்தைப் பார்த்தால் பிறாமணன் பேரிலே சோராவரி பண்ணினார்க [3] ளென்கிற சொல்லுக்கு யிடமாச்சுது. இது சேதி மஹா றாஜாவுக்கு தெரிந்த பிற்பாடு அந்த பிறாமணனை வீட்டுக்கு அனுப்பி உபசாரங்களைப் பண்ணியிருந்தால் பிறாமணன் பிழைக்கட்டும் அல்லது சாகட்டும், சொல்லுக்கிடமில்லாமலிருக்கும். அப்படிக்குப் பண்ணாம லந்த கிலிபிலி அண்ணா சொன்ன வாற்தையை விசுவாசமாக நம்பி அவன் மனதின் படியே மஹா றாஜாவும் அங்கீகாரமாக யிருந்தபடியினாலே அந்த ஆறணி பிறாமனனுக்கு காய்ப்ப்ட்டிருந்தும் சிவனோடே அறிவோடே யிருக்கச்சே காலிலே பிரியைக்[4]கட்டி பறையரைக் கொண்டு தெருவிலே இழுத்தபோது அவனுடைய றத்தம் சிந்தி றொம்பவும் உபத்திரவமாய் துக்கம் கஸ்த்தி பொறுக்கக்கூடாமல் படிக்கு கொஞ்சத்துாரம் இழுத்துபோன பிற்பாடு பிறானனை விட்டு விட்டான். அப்போ சகல சனமும் இந்த கிறுத்தியம் சந்தேகமில்லாமல் கடூரம் என்று சொல்லிக்கொள்ளும்படி யாச்சுது. றாச்சியம் போய் விடுகிறதுக் கிதே காறனமென்று சகல சனங்களும் வதந்தையாகச் சொல்லிக்கொள்ளுகிறார்கள்.

இதின் பிற்பாடு நவாபு கோட்டையை வாங்கின சேதியை இங்கிலீசு சற்தார்கள் சீமைக்கு இங்கிலீசு றாஜா கொறட்டு ஆப் டிறக்கட்டர்[5] முதலானவர்களுக்கு யெழுதினத்தின் பேரிலே அவாள் யோசினை பண்ணினது என்னவென்றால் எப்போதும் சென்னப்பட்டணத்திலிருந்து வருகிற சேதியில் நவாபு, மமூதல்லி கானுடைய நடத்தையும் கேழ்விப்பட்டுக் கொண்டு வருகிறத்தில் தஞ்சாவூர் றாஜாவினாலே நவாபு மமுதலிகானுக்கு யெந்தக் காரியங்களிலேயும் உபகாரமே தவிர அவரைத்தொட்டு அபகாரமில்லாமலிருக்க நவாபு ஒரு அல்ப காரியம் தொப்பா பணம் செல்லயில்லை யென்று தஞ்சாவூர் றாஜாமேலே பாளைய மெடுத்து தம்முடைய பிள்ளையும் அனுப்பிவித்தார். அப்போ மஹா றாஜா தோப்பா பணமும் பாளையத்துக்கு செண்ண சிலவும் ஒப்புக்கொண்டு அதுக்காக சீமையும் அடமானம் கொடுத்து ஒப்புக்கொண்ட படிக்கு பணமுஞ் சாம வாய்[6] செலுத்திவைத்து இருக்க மறுபடியும் நவாபு அகாறணமாய் தஞ்சாவூர்


  1. சவாபு சாலபண்ணி மறியலாக உளுக்கார்ந்தான் - அவரை எதிர்த்துப் பேசினார் (போ. வ. ச. பக், 122)
  2. கைமிஞ்சி நடப்பி வித்தபடியினாலே - சண்டை செய்தபடியினாலே (போ, வ. ச. பக். 122)
  3. சோராவாரி பண்ணினார்கள் - அதிக உபத்திரவம் செய்தார்கள் (போ. வ. ச. பக். 122)
  4. பிரியை - கயிறு (போ. வ. ச. பக். 122)
  5. கொறட்டு ஆப் டிறக்கட்டர் - Court of Directors (Gur. a. F. Lá. 122)
  6. சாமவாய் - ஜமாவாய், கேட்டதற்குமேல் (போ. வ. ச. பக். 123)