பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு

(சுருக்கம்)

1 போசல வமிசத்தின் ஆதி முதல்வர் திருமால். அவர் வழியில் வந்தவர் சூரிய நாராயணர். சூரியனிடத்தில் தோன்றியவர் மனு. மனுவின் வழியில் வந்தவர் இக்குவாகு. இவர் வழியில் கலியுகத்தில் சம்புமலைப் பகுதியில் சம்பு என்பவர் மகாராட்டிர தேயத்தலைவர் ஆனார்.

இச்சம்புவுக்குப் பிறந்தவர் முதல் ஏகோஜி. முதல் ஏகோஜிக்குச் சாம்ப சிவனருளால் முதல் சரபராஜா பிறந்தார். முதல் சரபராஜர் சோமாஸ் கந்த மூர்த்தியை உபாசித்து மந்திரோபதேசம் பெற்றார். அந்தச் சிறப்பினால் பாதுஷா பிந்தளிபுரம் என்ற ஊரைச் சாகீர் கொடுத்தார். முதல் சரபராஜருக்கு மகாசேனர் என்றவர் பிறந்தார்.

மகாசேனருக்கு 50 பிள்ளைகள்; மூத்தவர் ஏகசிவ சிவராஜா. ஏகசிவ ராஜாவின் மகன் இராமச்சந்திர ராஜா. இராமச்சந்திர ராஜாவுக்கு மகன் பீமராஜா. பீமராஜாவின் மகன் இரண்டாம் ஏகோஜி ராஜா. இரண்டாம் ஏகோஜி ராஜா சாத்தார் கெடியைத் தனதாக்கிக் கொண்டார். இவர் மகன் வராக ராஜா.

வராக ராஜா 55000 குதிரைகளுடன் பாதுஷாவுடன் போர் செய்து வெற்றி பெற்றார். இவரது மகன் மூன்றாம் ஏ.கோஜி.

மூன்றாம் ஏகோஜியின் மகன் பிரமாஜி. பிரமாஜியின் மனைவி அனுசா, இவர்களது மகன் முதல் ஸஹாஜி. முதல் ஸஹாஜியின் மனைவி உமாவூ. இவர் களின் மகன் அம்பாஜி. அம்பாஜியின் மனைவி ரேனுகாவூ. இவ்விருவருக்கும் பிறந்தவர் பரசோஜி.

பரசோஜியின் மனைவி உமாஹ". இவர்களின மகன் பாபாஜி. பாபாஜி யின் மனைவி ரேகாவூ. இவர்கட்கு இருவர் மக்கள். மூத்தவர் மாலோஜி, இளையவர் விட்டோஜி.

விட்டோஜியின் மனைவி ஆவுபாய். இவர்களுக்கு மூத்த குழந்தை பெண்; அம்பாபாயி என்று பெயர்; பிறகு எட்டுப் பிள்ளைகள் பிறந்தனர்.

மாலோஜியின் மனைவி உமாபாயி. இவர்கள் நாளில் தேவகிரியில் நிஜாம்பாதுஷாவும். விஜயதுருக்கத்தில் இப்ரஹிம் பாதுஷாவினுடைய மகன் அல்லி ஏதில்ஷாவும் ஆட்சி செய்து கொண்டிருந்தனர். இவ்விருவருக்கும் போர் மூண்டது. மாலோஜியும் விட்டோஜியும் தேவகிரி நிஜாம் பாதுஷா பக்கம்