பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மன்னர் வரலாறு

163


நிஜாம்ஷா தனக்கு முன்னாலே வழங்கிய சீர்மைகளைத் தனதாக்கிக் கொள்ள வேண்டுமென்று நினைத்த ஷாஜி, தேவகிரி துர்க்கத்தைச் சேர்ந்த எண்பது கோட்டைகளைப் பிடித்துக் கொண்டார். இப்பொழுது 96 மராட்டிய சாதியார்கள் எல்லோரும் இவருடன் சேர்ந்தார்கள். (இதன்பின்னர்ச் சூரிய வர்சம் சந்திர வம்சத்தரசர் பற்றியும், 96 மராட்டிய சாதியினர் பெயர்களும் சுவடியில் தரப்பெற்றுள்ளன).

மராட்டிய சர்தார்களெல்லாரும் ஷாஜியுடன் சேர்ந்த அளவிலே ஷாஜிக்துப் பெருமை மிகுவதாயிற்று.

இதையறிந்ததும் டில்லி பாதுஷா அல்லியேதில்ஷாவுடன் சேர்ந்து கொண்டு பீமா எனும் ஆற்றின் கரையில் இறங்கினார். ஷாஜி மூன்றாண்டுக் காலம் அவர்களுடன் போர்புரிந்தார். ஷாஜி ஆராதனை செய்யும் தெய்வம் கனவில் கூறிய வண்ணம் ஷாஜி போரை நிறுத்தித் தான் வென்ற பகுதிகளை இருவருக்கும் பகிர்ந்து கொடுத்து விட்டுத் தான் சாத்தாராவிலிருந்தார்.

பின்னர் அல்லியேதில்ஷா, ஷாஜியை அழைத்து அவருடன் ரனதுல்லாகானையும் அனுப்பித் தெற்குப் பகுதியில் உள்ள அரசர்களை வெற்றி கொண்டு தோஃபா பணம் பெற்று வருமாறு ஏவினார். அவ்விருவரும் சென்று இக்கேரி அரசர் வீரபத்திரர், கொங்கநாயக்கர், காவேரிபட்டணத்துச் செக தேவர், ரேங்கப்பட்டணத்துக் கண்டீரவர். தஞ்சாவூர் விஜயராகவர் செஞ்சி வெங்கட்ட நாயக்கர், மதுரைத் திருமலை நாயக்கர் முதலாகிய அரசர்களை வென்று, அவர்தம் நாடுகளைக் கைப்பற்றினர். அல்லியேதில்ஷா மகிழ்ந்து ஷாஜிக்குப் பெங்களூரைச் சாகீர் கொடுத்தார்.

பெங்களுர் தங்குவதற்கு வசதியாயிருந்தமையின் ஷாஜி சாத்தாரிலிருந்த தன் மனைவியரை அழைத்துக்கொண்டு வந்து பெங்களுரிலே தங்கியிருந்தார். சிவாஜிக்கும் ஏகோஜிக்கும் கல்வித்துறை பல கற்பித்தார்.

இப்பொழுது சிவாஜிக்கு ஆண்டு பன்னிரண்டாயிற்று. சாம்பசிவன் ஷாஜி கனவில் தோன்றினார்; சிவாஜியைச் சாத்தார் பூனா தேயங்களுக்கு அனுப்புமாறு கூறினார். ஷாஜி, தன் முதல் மனைவியின் மகனாகிய ஏகோஜி வயதில் சிறியவராயினும் மரியாதைக்குப் பெரியவர் என்று கருதி அவருக்கு இளவரசுப் பதவியும் பெங்களுர்ப் பட்டமும் சகம் 1562 (கி. பி. 1840) இல் கொடுத்தார்; சிவாஜியைச் சாத்தார் பூனாவுக்கு அதே ஆண்டில் பட்டம் கட்டியனுப்பினார். சிவாஜி சாத்தார் கெடிக்குச் சென்று பல கோட்டைகளைப் பிடித்துக்கொண்டு அரசாளத் தொடங்கினார்.

ஷாஜி பெங்களூரிலிருந்தார். அவரை அல்லியேதில்ஷா பலமுறை அழைத்தபோதிலும் போகவில்லை. ஆகவே அல்லியேதில்ஷா அவரை வஞ்சனையாகப் பிடித்து வருக என்று கூறிப் பல சர்தார்களுடன் முஸ்தஃபகான் என் பவரைப் பெங்களுர்க்கு அனுப்பி வைத்தார். முஸ்தஃபகானின் வஞ்சனையை அறிந்த ஷாஜி, தன் மூத்த குமாரன் சம்பாஜியைப் பெங்களூரிலேயே ஏகோஜிக்கு