பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182


யாத்திரைகளைச் சரபோஜி மேற்கொண்டார். இவ் யாத்திரைகளில் ரிசிடென்டு பிளாக்பர்ன் ஆணையின்படி அரசருக்கு எல்லா வசதிகளும் செய்து தரப்பட்டன. இவை உடன்படிக்கைக்கேற்ப நடந்தேறியனவாகும்.

அவ்வுடன்படிக்கையில் போர் ஏற்படின் அரண்மனையில் ஆங்கிலேயருடைய படைதங்கலாம் என்றிருந்தது. ஆனால் சரபோஜியினிடத்தில் கொண்டிருந்த பெருமையால் ஒரு சமயம் கும்பினியார் தம் படையை அரண்மனையில் தங்கச் செய்யாதொழிந்தனர்.

பழநியாத்திரைக்கு முன் அகல்யா பாயிக்கு இரண்டாவது பெண் பிறந்தது. அக்குழந்தைக்கு ராஜகுமாராபாயி என்று பெயரிடப்பெற்றது.


இவர் ஆட்சிக்காலத்தில் "பாஜ்' என்ற ஒரு அரிய பறவை வந்திருந்தது இவர் இப்பொழுது சிறந்த முறையில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்.

மகாராஷ்டிர அரசர்களது வரலாறு எல்லா நன்மைகளையும் தரவல்லது. இவ் வரலாற்றைச் சரபோஜியின் சிட்டினிசு பாபுராயர் என்பவர் எழுதினார்.

சகம் 1725 ருத்ரோத்காரி சித்திரை மாதம்.

கி. பி. 1803, மார்ச்சு மாதம் 25.