பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

தஞ்சை மராட்டிய

பால்கருடைய உடன்பிறந்தாள் தீபாபாயியை மணந்தார் என்றும், தீபாபாயி ஷாஜி, ஷரீஃப்ஜி ஆகிய இருமக்களைப் பெற்றெடுத்தார் என்றும் கூறப் பட்டுள்ளன. இவற்றால் பின்வரும் கால்வழி முறை பெறப்படும்:

கேலோஜி

பாபாஜி"

| மாலோஜி اهت قه ஜி.

x தீபாபாயி

| | ஷாஜி ஷரீஃப்ஜி

  • பாபாஜியின் தந்தை அம்பாஜி என்று போ. வ. ச. கூறும். கேலோஜி

மாலோஜியின் செய்திகள் போ. வ. சவில் இல்லை, மாலோஜியின் மனைவி தீபாபாயி என்று கி. பா. வும், டஃபும் (பக். 43) கூறப் போ. வ. ச. வும் (பக். 6) சிவபாரதமும் (பக். 3) உமாபாயி என்று கூறும்.

சர்தேசாய்' கூறுவது பின்வருமாறு:

சித்துரில் அஜய்சிங்கு என்றொருவரிருந்தார். முகமதியர் அவருடைய கோட்டையைப் பிடித்தனர். அஜய்சிங்கு தன் தமையன் மகன் ஹம்பீர்சிங்கு என்பவருடன் வெளியேறினார். இருவரும் ராஜ்நகரில் ஒரு கோட்டையைக் கட்டி அதனைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய நிலப்பகுதிகளை வென்று பல கோட்டைகளையும் எடுப்பித்து இறுதியில் உதயபுரி (Udaipur) யைத் தலைநகராக ஏற்படுத்திச் சுயேச்சையாக ஆட்சி புரியலாயினர். அஜய்சிங்கு இறந்த பிறகு அவன் மகன் சஜன்சிங்கு தெற்குப்பிராந்தியங்களின் மேல் படை யெடுத்துச் சென்று நாடுகளை வென்றார். அவருடைய வழியினர் டிலிப்சிங்குT மகாராணா, சிங்குT மகாராணா, போசஜி மகாராணா, தேவராஜ்ஜி மகா ராணா என்று சிலர் முகமதியர்களோடு இடையறாது போர்புரிந்தனர். இறு தியில் தேவராஜ்ஜி சிங்கணபுரம் (Singhapur) தலைமைப்பதவி (Patelship) பெற்று அங்கு இருந்தார். பின்னர் அவருடைய வழியினர் கான்வால் ஹிங்கூசி, வெருல், வாவி, முங்கி முதலாய ஊர்களின் தலைமைப் பதவி (Patelship) களை விலைக்குப் பெற்றனர். தேவராஜ்ஜியை யடுத்து வந்தவர்கள் முறையே தேவராஜ்ஜி, சுப்கிருஷ்ணாஜி, ரூப் கிருஷ்ணாஜி, பூமிந்திஜி, தீப்ஜி, பார்ஹத்ஜி காலாஜி என்கிற கால்கர்ணா, கர்ணாசிங்குT என்கிற ஜயகர, சம்பாஜி, பாபாஜி என்கிற சிவாஜி.

33. A New History of the Mahrattas Page 5 - 6