பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

தஞ்சை மராட்டிய

தத்திலே பாபாஜிருஜாவினுடைய பிள்ளை மாளோஜிருஜா மஹாசூரன் அநேகம் உயித்தத்திலே செயத்தை அடைந்திருக்கிருரென்று அந்த மாளோஜிராஜாவையு மவர் தம்பி விட்டோஜி ராசாவையும் தெவகிரி துற்கம் நிஜாம்பாத்ஷா தமக்கு கும்மக்காக அழைத்தார். அந்த ரெண்டு பேரும் தங்களுடைய சொந்த சேனை களையும் நிஜாம்ஷா வுடைய தளத்தையும் வாங்கிக் கொண்டு நிஜாம் ஷாவுடைய சத்துரு அல்லி யெதல் ஷா பேரிலே இந்த சேனைகளுடனே உயித்தம் பண்ணி செயத்தை அடைந்து நிஜாம் ஷாவுடைய சங்கடத்தை நிவற்த்தி பண்ணிக அவருடையதேவகிரி துற்க்கத்தில் ருஷ்சியத்தை அவருக்குஸ்தாபித் தார்கள். அதன் பேரிலே நிஜாம் ஷா சந்தோஷத்தை அடைந்து தம்முடைய ராட் சியத்திலே நாலத்தொரு ராச்சியம்" ஜாகீர் கொடுத்து இவாளை தம்முடகிட்ட யிருக்கவேணுமென்று பிருர்த்திச்சார். அந்தப்படியே மாளோஜிருஜா தம் முடைய ருஷ்சியத்தை தம்முடைய மந்திரி பாரிசம் பண்ணிப்போட்டு" தாமும் தம்முடைய தம்பியும் நிஜாம்கிட்டவே வாசம் பண்ணிக்கொண்டிருந்தார்கள்.அப்போ மாளோஜிருஜா என்கிறவருக்கு சஹா சரிபு பெ அலி கலந்தர் என்கிற ஒரு பக்கிரி * சித்தபுருஷன் சினேகிதராயிருந்தார். அந்தப்பக்கிரிபுடைய* தக்கியாவுக்கு" மாளோஜிருஜா போய் தமக்கு பிள்ளை

58. நிவந்த்தி - பரிகாரம் (டி3119)

59. நாலத்தொரு ராச்சியத்தைச் "செளத்" என்று போ.வ.ச.வில் (பக்கம் 6இல்) கூறப்பட்டுள்ளது. "நாலில் ஒரு பாகம் ராச்சியம் கொடுத்தமையைச் செளத் எனல் பொருந்தாது. இது எந்த வரலாற்று நூலிலும் இல்லை. இது ஆராய்ச்சி செய்ய வேண்டிய விஷயம்' என்று மேஜர் நாராயண பாலகிருஷ்ண கத்ரே (Gadre) தஞ்சையில் இருந்த பொழுது தன் கைப்பட எழுதிய மராட்டிய முகவுரையில் கூறியுள்ளார்.

60. மந்திரிபாரிசம் பண்ணிப்போட்டது-மந்திரியிடம் ஒப்பிவித்தது. சாதாரா பிதிலியூர் என்ற பகுதிகள் (திருமுடி சேதுராமன் பக்கம் 17). சரபராஜா காலத்தில் பிதிவியூர் (பிர்தலிபுரம்-போ. வ. ச. பக்கம் 2) பெற்றுச் சார்ேதார் ஆயினர். இரண்டாவது ஏகோஜிராஜா சாத்தார் கெடியைக் .ெபி. 1434 இல் வென்று கொண்டு சிம்மாசனபதியாயினார் (திருமுடி சேதுராமன் பக்கம் 10, இவற்றுடன் இப்பொழுது பெற்ற 'நாலத்தொரு ராஜ்யம் சாருேம்' சேர்ந்த பகுதிகளே மந்திரி களிடம் ஒப்படைக்கப்பட்டன - இவற்றுக்கு வேறு நூல்களில் ஆதாரம் இல்லை. 61. தாமும் தம்முடைய தம்பியும் - தாமிருவரும் டி3119)

62. சஹா சரீபு - ஷா ஷரீப் (போ. வ. ச. பக்கம் 7). சஹா சரீபு என்றுள்ளமையின் ஷஹாஷர்ப் என்று அப்பக்கிரிக்கும் பெயரிருந்தமை புலப்படும். அவருடைய திருவருளால் மாலோஜிக்கு மக்கள் பிறந்தமையின் முதல் மகனுக்கு ஷஹாஜி என்று பெயர் வைத்தார். ஷாஷரீப் என்பதைப் பெயராகக் கொள்ளின் முதல் மகனுக்கு ஷாஜி என்பதே பெயராகலாம். சிவபாரத சரித்திரத்தில் (பக்கம் ) ஷாஜி என்றே உள்ளது (டஃப் பக்கம் 43 கி.பா. பக்கம் 114). கிருஷ்ணாஜி அனந்த் ஸ்பாளத் எழுதிய நூலில் சாஹாஜி (Sahai) என்றுள்ளது (சென். பக்கம் 2). 63 முதல் 64 வரை டி 3119இல் இல்லை.

55. பக்கிரி-ஃபர்ே தக்கியா-தங்குமிடம் (Resting Place). “905 uéðiffusen-u தக்கியாவுக்கு" என்றவிடத்தில் போ. வ. ச. வில் "ஒரு சித்த புருஷரான சன்யாசியின் சிநேகம் சிடைத்தது. அவரிடம் சென்று' என்றவையுள்ளன.