பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மன்னர் வரலாறு

207


நடந்து கொண்டமையால் கொல்லப்பட்டார். பின்னர்த் துளசா அரசு கட்டிலெய்தினார்; 24 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவர் ஆட்சியில் நவாபு தஞ்சை ஆட்சியைக் கைப்பற்றினார். பின்னர் லாட்டு பிக்கட்டு (Lord Pigot) வந்து துளசாவுக்குப் பழையபடி ஆட்சியை அளித்தார். இவருக்குப் பிள்ளைகள் இல்லை. ஆகையால் ஒருவரைச் சுவீகாரம் எடுத்துக் கொண்டு "ரிசிட்டென்று ஆடலிஷ்டன் கற்னல் இஷ்ட்டுட்" [1]முதலானோர் கையில் அவரை ஒப்புவித்தார்கள். சிவராயர் சூழ்ச்சி செய்து 12 பேரை விசாரிக்கச் செய்து கெவுனரை நம்பச்செய்து அமர்சிங்கை அரசனாக்கினார்.

இதுவரையிலும் ஏகோஜி முதல் அமர்சிங்கு அரசாட்சி எய்தியது வரை கூறப்பட்டன. மேல் அமர்சிங்கு அரசாட்சியின் குறைகள் கூறப்பட்டுள்ளன. அவையாமாறு:

(அ) கும்பினியாருக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுக்காமல் இருக்கின்றார்.

(ஆ) சிவராயர் பச்சப்ப முதலி ஆகியோர் ஏழைச்சனங்களைத் துன்புறுத்துகின்றார்கள். (இ) துளசாவின் இறுதிக் கடன்களைச் சாத்திரப்படிக்கு நடத்தவில்லை.

(ஈ) (சுவீகாரம் எடுத்துக் கொண்ட) அரச குமாரனைத் தன் தாயிடம் கூடச் செல்ல விடுவதில்லை; கல்வியும் அளிக்கவில்லை; வெளியிலே வரவெட்டாமல் காவலில் வைத்துள்ளனர்.

(உ) துளசாவின் பெண்டுகள் பேரிலும் சுலும்பு பண்ணுகிறார்கள்.

(ஊ) தஞ்சை நகரத்தில் ஞாயமில்லை: அநியாயம் நடப்பதால் சனங்கள் பயப்படுகின்றனர்.

(எ) அமிர்தசிங்கு ராஜா அயோக்கிய மானபடியினாலே தம்முடைய அதிகாரம் நன்றாய் நடக்க வேணுமென்று நாளாவிதமாய்ச் செலவு செய்கிறார்.

(ஏ) பணமுடை காரணமாகச் சீர்மை யெல்லாம் துபாசிகளுக்கு அடமானம் வைக்கிறார்.

(ஐ) மானியவரி வீட்டுவரி போன்ற வரிகளால் மக்களைக் கொடுமைப்படுத்துகிறார்.

ஆகையால் கும்பினியார் "இந்த ஞாயம் நன்றாய் விசாரணை" பண்ண வேண்டும் என்ற வேண்டுகோளுடன் இந்தச் சுவடி முடிகிறது.[2]


  1. 18. இந்நூல் பக்கம் 141 காண்க. (Resident Hudleston; Colonel Stuart)
  2. 19. ஆர் 40.49 (இது தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பெயர்த்தெழுதிப்பெறப்பட்டுள்ளது). பெயர்த்தெழுதிய சுவடியில் பக்கம் 52-54; 58; 59.