பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

213

 21,3

இவர் இயற்றிய நூல்கள் 52 என்று கூறப்படுகிறது. திருவிடைமருதுாரில் இருந்தவரும், அமர்சிங்கருடைய மகனாருமாகிய பிரதாபராம மஹாராசாவுக்கு வேதநாயகர் 1-2-1828இல் எழுதிய கடிதத்தில் "சிறிதும் பெரிதுமான் அறுபது பொஸ்தகங்களையுண்டு பண்ணினேன்' என்றெழுதியுள்ளார். இவற்றுள் சிறந்தது "பெத்தலேம் குறவஞ்சி" என்பதாகும். பிறிதொரு சிறந்தநூல் 'பேரின்பக்காதல்' என்பது. இது 1813இல் இயற்றப்பெற்றது. கி.பி. 1815 இல் திருச்சியில் இந்நூலை அரங்கேற்றம் செய்தபொழுது இவருக்கு "வேதசாஸ்திரி' என்ற பட்டப்பெயர் வழங்கப்பெற்றது. சுவார்ஷ-க்குப் பிறகு தஞ்சையில் வாழ்ந்த பாதிரியார் கொலோஃப் (Rev. Kohlhoff) என்றவருடைய பரிந்துரை யின்படி இவருக்கு ஒரு சால்வையும், சரபோஜி மன்னரைத் திங்களொன்றுக்கு இருமுறை பார்க்கும் உரிமையும், மாதச்சம்பளமும் கொடுக்கப்பெற்றார். இவர் போசலை வமிச சரித்திரத்தைச் செய்யுள் நடையாக இசைத்துக் கொடுத்ததாகத் தெரிகிறது. 1-2-1828இல் திருவிடைமருதூரில் வாழ்ந்த பிரதாப சிம்மருக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி,

'சங். கொலோப்பையரவர்கள் எனக்காக மெத்தவும் சிபாரிசு பண்ணின தின் பேரிலே மகாராசா அவர்களுண்டுபண்ணின போசலை வம்மிச ராச சரித்திரத்திலே கொஞ்சத்துாரம் விருத்தமாகப் பாடின சில பாடல்களைக் கேட்டமாத்திரஞ்செய்தார்கள்'

என்பதால் இவர் போன்ஸ்லே வமிச சரித்திரத்தைச் செய்யுள்நூலாக இயற்றினார்' என்பது பெறப்படுகிறது. ஒரு சமயம், சரபோஜி மன்னர் பிரக தீசுவரர் பேரில் ஒரு குறவஞ்சி பாடுமாறு கேட்டார் என்றும், வேதநாயகர் மறுத்தமையின் இருவருக்கும் மன வேற்றுமை ஏற்பட்ட தென்றும் தெரிகிறது." இவர், சில காலம் மெக்கன்சி துரையினிடத்தில்" அலுவல் பார்த்து நாட்டு வரலாற்று நூல்களைச் சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இவர் 24-1-1864 இல் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

1. டாக்டர். தா.வி. வேதநேசன், தஞ்சைவேதநாயக சாஸ்திரியார், கிறிஸ்தவ இலக்கிய சங்கம், சென்னை, 1956, பக். 18. -

2. மேம்படி நூல் பக்கம் 36-37 3. மேற்படி நூல் பக்கம் 49. 4, இப்பாடல் நூல் இந்நாளில் கிடைத்தால் சிறப்பாக இருக்கும். 5. டிெ நூல் பக்கம் 51-52.

6. “Vedanaigen, a Christian in the employ of Colonel Mackenzine” — Taylor William, Oriental Historical Mss. in Tamil Language Vol. If, Page 217.

7. தஞ்சை வேத நாயக சாஸ்த்திரியார் என்ற நூல் பக்கம் 55; மெக்கன்சி சுவடி டி 3762 opsûlso “Vedanayagam's collection from Tanjore” steway @@#&@ smawarib.