பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

தஞ்சை மராட்டிய

I0 பிற்பாடு ரெண்டாவது பிறந்து அவருக்கு சறபொஜிருஜா வென்று பேர் வைத்தார்கள் =ய டு =அதின் பிற்பாடு மூத்தபிள்ளை சஹஜிரு.ஜாவுக்கு அஞ்சுவயசாச்சுது. அப்போ கொலாபுரத்து ராஜாவுக்கும் நிஜாம்ஷாவுக்கும் விகல்ப்பமாகி கொலாபுரத்துருஜாவின் பேரிலே இந்த அஞ்சுவயதுள்ளபிள்ளையின் தொகப்பன் மாளோஜிருஜாவை சண்டைக்கு அனுப்பிவிச்சார். அப்போ மாளோஜி முஜா தம்முடைய சேனை பரிவாரங்களுடனேயும் பாத்ஷாவுடைய சேன களுடனே கோலாபுரத்து ராஜாவின் பேரிலே பாளைய மெடுத்துப்போய் அற்புத மான சண்டைபண்ணி சத்துருக்களை அடித்துக் கொண்டு கைகலந்து சண்டை யாகிற போது றணக்கள்த்திலே வீரசொற்கத்தை அடைந்தார்." அதின்பிற்பாடு நிஜாம்ஷா என்கிறவர் சஹஜி ருஜா சரபோஜிருஜா சி றுபிள்ளைகளானபடி யினலே அவர்களை அவர்களுடைய சிறிய தொகப்பனர் விட்டோஜிருஜா சுவா தீனம் பண்ணி அவர்களுடைய யோக்கியதைக்குத் தக்கதாய் சவறrணை

74. சரபோஜி என்று போ. வ. ச. விலும் திருமுடி சேதுராமன் சுவடியிலும் உள்ளன. சிவப்ாரத சரித்திரமும் சரபோஜி என்று கூறும் (பக்கம் 5). ஷரீஃப்ஜி என்று டஃப் (பக்கம் 48இலும்), கி. பா. (பக்கம் 114இலும்) கூறுவர். ஷாஷாப் தன் பெயரை வைக்குமாறு கூறியமைக்கேற்ப மூத்த மகற்கு ஷாஜி என்று பெயர் வைக்கப்பட்டது. இரண்டாவது மகனுக்கு அவர் பெயருள் எஞ்சிய பகுதியாகிய ஷரீஃப் என்பதனோடு ஜி சேர்த்து ஷரீஃப்ஜி என்று பெயரிடப்பட்டது என்ற ட்ஃப் கற்றுப் பொருந்துவதாகவுள்ளது. 'ஷரீஃப்ஜி' என்பது 'ஸரபோஜி' என்று திரிந்திருத்தல் கூடும். கிருஷ்ணாஜி அனந்த் ஸ்பாளத் தம் நூலில் ஸ்ரஃப்ஜி (Sarafi) என்பர் (சென். பக்கம் :). ஷாஜி பிறந்த இரண்டு ஆண்டுகட்குப் பிறகு சரபோஜி பிறந்தார் என்று சிவபாரதம் கூறும். சரபோஜி 1997இல் பிறந்ததாகக் கி.பா. பக்கம் 114இல் உள்ளது. முகமதியரை அறவே வெர்த்த சத்திரபதி சிவாஜியின் தந்தை முகமதிய குருவின் அருளால் பிறந்தவர் என்பது அறிதற்பாலது. "Even in those early days, the Hindu recognised the value of a vow made to the Muslim shrine and history must record the strange coincidence that Shivaji's father Shahaji was born out of a prayer at a Muslim Shrine”—Karaka, D.F.-Shivaji Page29 - என்ற கூற்றும் இங்குக் கருதற்குரியது. 78. முத்தபிள்ளை சஹஜிரு.ஜாவுக்கு ........ சண்டைக்கு அனுப்பிவிச்சார் - இந்த இடத்தில் போ. வ. சவில் "ஷாஹாஜி ஐந்து வயதாக இருக்கும் போது கோலாபுரத்து அரசருக்கும் நிஜாம் ஷாவுக்கும் மனவருத்தம் ஏற்பட்டுச் சண்டை மூண்டது” என்றிருக்கிறது. இது சுருக்கமாக வும் விளக்கமாகவும் இருக்கிறது. 77. இந்திராபுரத்து மேல் சண்டைக்குச் சென்றதாகச் சிவபாரத சரித்திரம் கூறும் (பக்கம் 5). 78. அடித்துக் கொண்டு - செயித்து (டி. 119)

79. மாளோஜி 1814இல் இறந்ததாகத் திருமுடி சேதுராமன் சுவடியில் உள்ளது (பக்கம் 19); தகாகாவ் (பக்கம் 15) மாலோஜி 1619இல் இறந்ததாகக் கூறுவர்; சர்தேசாப் (பக்கம் 53) 1620 என்பர்.

குறிப்பு:- ஷாஜி 1609இல் பிறந்தார் (மெக்கன்சி சுவடி போ. வ. ச. திருமுடி சேதுராமன்) எனின் அவர் வயதினர் ஆக இருக்கும்பொழுது அதாவது 1614இல் அவர் தந்தை மாலோஜி இறந்தார் என்பது பொருந்தும். சர்தேசாய் (பக்கம் 51), டஃப் (பக்கம் 43) ஆகியோர் அாஜி பிறந்தது 1594 மாலோஜி இறந்தது 1619 என்பர். அங்கனமாயின் மாலோஜி இறந்தபொழுது ஷாஜி ஐந்து வயதுடையவர் என்பது பொருந்தாது. மாலோஜி போரில் இறந்ததாக வரலாற்றாசிரியர் யாரும் குறிப்பிடவில்லை.