பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மன்னர் வரலாறு

229

5. சித்ரகுப்தா (Chitragupta's Bakhar)

இது சபாஸதை அடிப்படையாகக் கொண்டு விரிவாக எழுதப்பெற்ற நூல். சித்ர குப்தர், சிவாஜியின் சிட்ணீஸ் ஆகிய பாலாஜி ஆவ்ஜி (Balaji Avji) யின் நெருங்கிய உறவினர் ஆவர். இந்நூலை எழுதியவராகிய ரகுநாத் யாதவ் என்பார், சித்ரகுப்தா என்று புனை பெயர் பூண்டார். இவர் கோலாபூரில் ஆண்ட சம்பாஜியின் வேண்டுகோட்கிணங்க எழுதினார் என்று தெரிகிறது. எனவே இந்நூல் 1760-1770 க்கு இடைப்பட்ட காலத்ததாகலாம்.

6. ஷெட் கான்கர் (Shedganvkar Bakhar) இதுவும் சபாஸதை அடியொட்டி எழுதப்பட்டதே.

7. ராய்ரி (Rayri)

ராய்ரி கோட்டையினின்று கிடைத்த சுவடியொன்றுண்டு. இது ஸ்காட் வாரிங் (Scott Waring) என்பவரால் புகழப்பட்டது. இதுவும் ஆங்கில மொழி பெயர்ப்புடையது. ஜஸ்டிஸ் தெலங் (Justice Telang) என்பவர் இந்நூலைச் சிறப்பித்துக் கூறவில்லை.

8. ஜேதே ஷாகாவளி (Jedhe Shakavali)

இதில் கி. பி. 1618 முதல் 1697 வரையில் நிகழ்ந்த செய்திகளுட் சில குறிக்கப்பட்டுள்ளன. ஜேதே என்ற மரபினர் ஜேதே என்ற மரபினர் தாம் நேரில் கண்டறிந்த செய்திகளை அவை நிகழ்ந்த சமயத்திலேயே குறித்துவைத்துள்ளனர். இவை தனித்தனித் தாள்களில் குறிக்கப்பட்டு வந்தன. இவை 18- ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தொகுத்து எழுதப்பட்டன. சில குறிப்புக்கள் தவறுடையன என்று கருதப்பெறும் 1298 இல் வெளியிடப்பெற்ற. சிவாஜி நினைவு மலரில் (Shivaji Souvenir)[1] ஜாதுநாத் ஸர்க்கார் அவர்களின் ஆங்கில மொழி பெயர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. மராட்டியில் எழுதப்பட்ட பகுதியானது திலக் (Lok. B. G. Tilak) அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுப் பூனே பாரத இதிகாச ஸம்ஷோதக் மண்ட லியினரால் (Bharath Itihas Samshodak Mandal), 1916இல் வெளியிடப்பெற்றது. கன்னோஜி ஜேதே (Kanhoji Jedhe)யும் அவர் மகன் பாஜி (Baji) யும் சிவாஜிக்கும் அவருடைய தகப்பனாருக்கும் உதவியாளராக இருந்தனர். அவர்கள் காலத்தில் நடந்த சிறந்த நிகழ்ச்சிகளே இதில் குறிக்கப்பட்டுள்ளன. இதில் 243 செய்திக்குறிப்புக்கள் உள.

9. ஜேதே கரீனா (Jedhe Kareeaa)

இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு 1928 இல் வெளியிடப் பெற்ற சிவாஜிநினைவு மலரில் அச்சிடப்பெற்றுள்ளது. இது நாகேஷ் (Nagesh) என்பவரால் எழுதப் பெற்றது. இதில் ஜேதே மரபினரோடு தொடர்புடையதாகிய சிவாஜி வரலாறு சுருக்கமாகவும், சம்பாஜி, ஷாஹூ, ராஜாராம் ஆகியவர்க ளின் செய்திகள் பெயரளவில் (இரண்டு பக்கங்களிலும்) கூறப்பெற்றுள்ளன.


  1. Editor - Sardesai, G.S. Publisher, Kesav Bhikoji Dhavole, Girgaum, Bombay, Shake 1849.