பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மன்னர் வரலாறு

231

“It ends abruptly at Canto 32, Stanza 9, in the midst of Shivaji's campaign in Dabhol in 1661”

என்பர் ஜாதுநாத் சர்க்கார் அவர்கள்.[1]

குறைப்பகுதி கிடைத்ததற்குச் சில ஆண்டுகட்குப் பின்னர், கவீந்திரருடைய நூல் போன்று ஒரு நூல் கிடைத்தது. ஆனால் அது சம்போஜியின் வரலாறு கூறுவதாக இருந்தது. அது கோலாபூரில் ராஜோபாத்யாயரது குடும்பத்தாரிடமிருந்தது.

அடுத்துப் பரோடா கீழ்த்திசை நூலகத்தில்,[2] 1940இல் 215 - பக்கங்கள் கொண்ட உதிரி ஏடுகள் கிடைத்தன. இவற்றுள் 78 பக்கங்கள் - வரிசையாக அமைந்த 13 அத்தியாயங்களும் 872 பாடல்களும் உடைய பகுதி - சிவாஜியைப் பற்றிப் பரமானந்தர் எழுதியதாகக் காணப்பட்டது. எஞ்சிய பகுதியில் 137 பக்கங்கள் கவீந்திரருடைய பெயரர் இரண்டாம் கோவிந்தர் எழுதியவையாகவும், தொடர்பற்றவையாகவும், பல பக்கங்கள் இல்லாமலும் காணப்பட்டன. இவற்றை ஜி. என். சர்தேசாய் அவர்கள் கெயிக்வாட் கீழ்த்திசை வரிசையில்[3] “பரமானந்த காவியம்” என்ற பெயரில் அச்சிட்டுள்ளார்.

இச்சுவடியிலிருந்து இப்புலவர் குடும்பத்தைப் பற்றிய சில தகவல்கள் தெரிய வருகின்றன. இப்புலவர் குடும்பம் அஹமத்நகர் வடக்கு மாவட்டத்தில் நெவாசா (Nevasa) என்ற ஊரில் இருந்தது: அங்குக் கோவிந்தபட்டர்[4] என்ற தேசஸ்த பிராமணர் இருந்தார்; அவருக்கு ‘அனந்த்’ என்ற ஒரு மகன்; இவ்வ நந்திருக்குச் சிவாஜி “கவீந்திர கவீஷ்வர்” என்ற பட்டம் அளித்தார்; பின்னர்ப் “பரமாநந்தர்” என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்; இவருக்கு ஸ்ரீதர், தேவத்தத்தர் என்று இரு மக்கள்; தேவதத்தருக்கு ஒரு மகன்; இரண்டாம் கோவிந்தர் என்று பெயர்; இம்மூன்று தலைமுறையினரும் கவீந்திரர் என்ற பட்டம் பூண்டனர்; இக்குடும்பத்தினருக்கு இரண்டு ஊர்கள் வழங்கப்பட்டிருந்தன - என்பனவாம்.

கி.பி. 1666இல் சிவாஜி அவுரங்கசீபைப் பார்க்க ஆக்ராவுக்குச் சென்ற பொழுது பரமானந்தரும் சிவாஜியுடன் சென்றிருந்தார். சிவாஜி ஆக்ரா சிறையினின்று தப்பி வந்த பொழுது பரமானந்தர் ஜெய்பூரில் கைது செய்யப்பட்டார். சிவாஜி தப்பியதற்கும் பரமானந்தருக்கும் தொடர்பின்மையறிந்த பாதுஷா, கவிஞரைச் சிறையினின்று விடுதலை செய்தார். பின்னர் இவர் வாரணாசியில் (Bcnares) சில காலம் தங்கியிருந்தார்; பிறகு 1670இல் மகா


  1. House of Shivaji, Page 287.
  2. Baroda Oriental Institute Library.
  3. Gaikwad's Oriental Series
  4. சிவபாரத சரித்திரம், தமிழாக்கம் பக்கம்