பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

39

 39

ருஜா சேனைகளை முஸ்த்தீது பண்ணிக்கொண்டு அல்லியெதல் ஷாவின் பேரிலே சண்டைக்கு போறத்துக்கு ஆயித்தமானர். அப்போ’ பீமசேபைதியும் வந்து சேர்ந்தான். இப்படியிருக்கக்கொள்ள சித்திரக்கல்லு துற்க்கத்திலே ருச்சிய பாரம் பண்ணுகிற பீச்சுகத்தி பறமா’ என்கிறவன் மஹாசூரன்: அவனுடைய வலது பக்கத்தில் மூவாயிரம் குதிரைக்காறர்கள்; அவர்களுடைய கத்திகளுக்கு பொன்னில்ை பண்ணப்பட்ட உறை'; அவனிடதுபக்கத்தில் மூவாயிரம் குதி ரைக்காறர்கள்; அவாளுடைய கத்திக்கு வெள்ளியில்ை உறை யிதுவுமல்லாமல் அவனுக்கு முன்னேயும் பின்னேயும் போற சேனைகள் வேறே; அவனுடைய சேனைகள் வெகுகுராள்; அவன்தன்சேனைகளோடே' அல்லியெதல் ஷா சீர்மை விஜையாபுரம் பேட்டையில் வந்து விழுந்து கொள்ளையடித்துக்கொண்டு போறது: இப்படி அனேகம் விசை பண்ணிக்கொண்டு வந்தான். அவனந்தவிசை யும் முன் தென்டகப்படிக்கு விஜாபுரத்து பேட்டையை கொள்ளையடித் துக் கொண்டு போய்விட்டான். அப்போ அல்லியெதல் ஷா பண்ணின யோசனை: தெற்கு பிருந்தத்தில் பெங்களுருக்கு முஸ்தபகானை அனுப்பியிருந்தும் உயித்தமாகுது. ஆனல் சம்பாஜிருஜா சுவாதினமாகிறதில்லை. சித்திரக் கல்லு துற்கத்து பறமா என்கிறவன் விஜாபூர்பேட்டை முதல் அடிச்சு" கொள்ளையடித்துக் கொண்டுபோனன். புனவுக்கு முசெகான் பத்தெகான் இவாளை அனுப்பிவித்த இடத்தில் சிவாஜிருஜா முசெக்கான கொண்ணு போட்டார். பத்தேகான் எல்லாத்தையும் தோத்து உயிரோடே தப்பிவந்தான். இப்போ சிவாஜிருஜா விஜாபுரக்கோட்டையின் பேரிலே பாளையமெடுத்து பிறப்பட்டு வர ஆயித்தமாகயிருக்கிருர். அவர் மகாசூரன், ஈசுவரப்பிறசாதி," யெங்கே போனுலும் செயத்தை அடைகிருர். அப்படிக்கொத்தவர் இவடத்தில்" வந்தால் விஜாபுரத்துக் காரியமுஞ் சமுசயமாக யிருக்குது. இதுக்கு நன்ருய் யோசனை பண்ணிக்கொண்டு சஹஜிரு.ஜாவுக்கு கவுல் குடுத்து" விடுதலை பண்ணி இவரைக் கொண்டு இந்த ருஜகாரிய மெல்லாம் ஸ்த்திரப்படுத்த வேணுமென்று உறுதியாய் யோசனை பண்ணி சஹஜிருஜாவை கயிதுலே" யிருந்து விடுதலை பண்ணி பேட்டிக்கு அழைப்பிவித்து அல்லியெதல்ல;ா சொன்னது; ஒய் ருஜாவே உமக்கும் யென்னுடைய தொகப்பனர் யிபருயிமுகானுக்கும்'

21. முஸ்த்திது - முஸ்தீபு (டி. 782; டி3119)

22. 'அப்போ' என்ற இடத்தில் டி3119இல் 'சிறேபால துருக்கத்தைச் சாதித்துக் கொண்ட" என்ற பகுதி அதிகமாகவுளது.

23. பீச்சுகத்தி பறமா - பிச்சுகத்திவர்மா (டி3119); விச்சகத்திபரமா (போ. வ. பக், 27)

24. உறை - ஒரை (டிபி 762) 25. அவன்தன் சேனைகளோடு - இந்தச் சன்னாகத்தோடே அவன் (டி3119)

26. அடிச்சு - இச்சொல் டி3119 இல் இல்லை

27. ஈசுவரப்பிறசாதி - வரப்பிரசாதி (டி. 119)

28. இவடத்தில் - பாளையம் எடுத்து (டி. 119)

29. கவுல் குடுத்து - வாக்குக் கொடுத்து (போ. வ. ச. பக். 18) 30. கயிதுலே - கைதியிலே (டி3119)

31. இப்ராஹம் எதல் ஷா (கி. பா. பக். 101 எண். 6)