பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

51

பண்ணி சிவாஜி ருஜாகிட்ட அனுப்பிவித்தார். அவர் ருஜாகிட்ட வந்து றம்பவும் ஆப்த்தமாய் பேசி பேட்டி சந்தி வாற்தைகளும் சொன்னர். அதை சிவாஜிரு.ஜா அங்கிகாரம் பண்ணி மெத்த உத்தமமாச்சுது, நம்முடைய மனதிலே அபெட் சையா யிருந்தபடியே அப்துல்லாகானும் சொல்லி அனுப்பிவித்தார். அவர் செயவல்லிபுரமும் சாவளி என்னப்பட்ட மைதானமும் இவடத்திய காடும் செடிகளும் இதுகளை ஒண்னும் பாத்ததில்லையே, ஆகையால் இவடத்திலே தானெ வந்தால் பேட்டியும் வாங்கி பேசவேண்டிய பேச்சும் பேசிக் கொள்ளலா மென்று சொல்லி அனுப்பிவித்தார். இந்த வற்தமானம் வைக்கில் கிஷ்ணுசி பண் டிதர் வந்து சொல்லச்சே அப்துல்லாகான் றம்பவும் சந்தோஷமாய் பாளையம் கூச்சுப்பண்ணிப் பயணம் பிறப்பட்டான். அப்போ கூடயிருந்த வசீர்கள் சொன் னது. அந்த யிடத்துக்கு போக போகாது. சிவாஜிருஜா கொஞ்சக் காரணல்லர்." யேதாகிலும் கபடம் பண்ணுவாரென்று வெகு விதமாய்ச் சொன்னர்கள். அப சகுனமும் ருெம்பவு மாச்சுது. அதுகளை ஒண்னும் பறவாய்ப் பண்ணுமல் லொஹபறுவதம் தாண்டிப் போய் சாவளி கெடிக்கு வெளியிலே இறங்கி ருஜா வுக்குச் சொல்லி அனுப்பிவித்தான். அப்போ ருஜா கணவாய்கள் கெடிஸ்தளங்க ளெல்லாம் கட்டிக் கொண்டு வெளியிலேயிருக்கிற மனுஷாளை உள்ளே வரா மல்படிக்கும் வழிகளிலெல்லாம் மரம் வெட்டி அப்துல்லாகானுடைய மனுஷியா ளுக்கு தாங்கள் வந்த வழிகூட தங்களுக்குத் தெரியாமல் பண்ணி அந்தந்த கெடி துற்க்கங்க ளெல்லாம் மசுபத்துபண்ணி" புளுபிருந்தியங்கள் பின்னேயும் தாம் நூதினமாய் சம்பாதித்த சீர்மைகளிலும் அந்தந்த டாளுவிலே இருக்கிறவர் களுக்கு தம்முடைய சங்கேத நகாரு அடிச்ச உடனே அந்த சப்த்தம் கேட்ட ழிைகைக்கு நாலுபக்கத்திலேயு மிருக்கிற சேனைகளும் கூடி அப்துல்லாகான் பாரிசம் ஒரு பூனைக்குட்டியை முதலாய் விடப் போகாது என்று தாக்கிது பண்ணி தாம் சாவளி கெடி வன துற்க்கத்துக்குள்ளே மைதானத்திலே சதிற்ப்பண்ணி அப்துல்லாகானை பேட்டிக்கு அழைத்தனுப்பிவித்தார்.

இப்படியிருக்கிற சமையத்திலே சிவாஜிரு.ஜாவுக்கு சேதி வந்தது என்ன மென்ருல் அப்துல்லாக்கான் விசையாபுரம் விட்டு வருகிற வழியிலே நாம் புதி சாய் கட்டியிருந்த சீமை ஒரட்டுக்கும் அவன் கட்டிக்கொண்டு கொள்ளேயுமடிச்சுக் கொண்டு வருகிற போது உம்முடைய மூத்த தமையனர் சம்பாஜிருஜா சில சேனைகளை சேர்த்துக் கொண்டு உயித்தத்துக்கு போனர். அவரை வளைத்துக் கொண்டு முன்னே கவுலும் கொடுத்து கிறுத்திறமம்பண்ணி அவரைக் கொண்னு போட்டார்கள்." அந்த சம்பாஜிருஜா பரமபதம் அடைந்தது சாலியவாகன

கே. கொஞ்சக் காரணல்லர் - சாமானிய மானவர் அல்ல போ. வ. ச. பக். 40) 67. மகபத்துப்பண்ணி - பலமுள்ளதாகச் செய்து (போ. வ. ச. பக். 40) 68. சம்பாஜி இறப்புப்பற்றிச் சர்தேசாய் (பக். 80-81) கூறுவது பின்வருமாறு:

“At Kanakagiri Sambhaji resided with his father; ...... Appa Khan the palegar of Kanakagiri raised the standard of revolt with which Shahji and Sambhaji found themselves unable to cope. So in 14 the Adil Shah sent Afzal Khan to their support. During the encounter that ensued Sambhaji was